இது உலக மகாநடிப்புடா சாமி… தரையில் விழுந்து பாசாங்கு செய்யும் குதிரை! – வைரல் வீடியோ..!


ஜிங்ஜாங்’ என்ற குதிரை மீது ஏறி சவாரி செய்ய முயன்றால் தனக்கு நோய்வாய் பட்டது போல நடித்து தரையில் திடீரென விழுந்து விடுகிறது.

சுறுசுறுப்பு, வேகம், கடின உழைப்பு போன்றவை குதிரைகளுக்கு உண்டான சுபாவம். ஆனால் ‘ஜிங்ஜாங்’ என்ற குதிரை மீது ஏறி யாரேனும் சவாரி செய்ய முயன்றால் தனக்கு மயக்கம் வருவது போல் நடித்து தரையில் திடீரென விழுந்து விடுகிறது.

உயிர் போனால் எப்படி தரையில் படுத்திருக்குமோ, அதே போல அந்த குதிரை படுத்துக்கொள்கிறது. சவாரி செய்ய வந்தவர் நோய் வாய்ப்பட்ட குதிரை என்று திரும்பிச் சென்றதும் அந்த குதிரை துள்ளி எழுந்து விடுகிறது.

குதிரைக்கு ‘ஜிங்ஜாங்’ (Jingang) என்று பெயர் வைத்துள்ளனர். இந்த சுட்டிக் குதிரை செய்யும் சேட்டை தான் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. மிகக்குறைந்த நேரத்தில் 2 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றிருக்கிறது.

பேஸ்புக்கில் பிராசிஸ்கோ ஜலாசர் என்பவர் இது குறித்து பதிவேற்றம் செய்திருக்கிறார்.

2020-ம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருது இன்னும் அறிவிக்கவில்லை அப்படி அறிவித்தால் இந்த குதிரைக்கு வழங்கலாம் என சமூக வலைதளவாசிகள் கிண்டலாக தெரிவித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பாக, நகம் வெட்டுவதை விரும்பாத நாய் ஒன்று, நகவெட்டியை அருகில் கொண்டு சென்றாலே மயக்கம் வருவதுபோல் தரையில் விழுந்தது. இந்த வீடியோவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!