அந்தரங்க உறவில் விரிசலை ஏற்படுத்தும் பிரச்னை இது தான்…!


அதிக உடல் பருமன் சமூக வாழ்க்கையிலும் தாம்பத்திய உறவிலும் மகிழ்ச்சியை தடை செய்கிறது என்கிறது ஒரு ஆய்வு.

உடல் பருமன் தற்போது பரவலாகக் காணப்படும் பிரச்னையாக உள்ளது. அதனை சரிவரக் கவனிக்காவிட்டால், பல்வேறு நோய்களுக்கும், பாதிப்புகளுக்கும் வழிவகுக்கும் அதுகுறித்த விழிப்புணர்வை நிச்சயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். உடல் எடை அதிகரிப்பதால் ஒருவருக்கு பலவித அசெளரியங்கள் நேரும். உடல் பருமன் அதிகம் உள்ளவர்களின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

அதீத உடல் எடை உடைய சில ஆண்களுக்கு ஆண்மைப் பிரச்னை ஏற்படுகிறது. தாம்பத்திய உறவில் மகிழ்ச்சியற்ற நிலை உள்ளது என்கிறது அந்த ஆய்வு. காரணம் ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் என்ற செக்ஸ் ஹார்மோன் அவர்களுக்கு மிகவும் குறைவாக சுரக்கும். இது தவிர நீரிழிவு நோய், இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளால் இவர்கள் பாதிக்கப்படலாம்.

ஓபிஸிட்டி என்ற பிரச்னை இளம் வயதிலிருந்தே இருந்தால் உரிய சிகிச்சை எடுத்து இதிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம். கெட்ட கொழுப்பு சேராமல் நல்ல சத்தான உணவுகளை சாப்பிடுவது, போதிய உடற்பயிற்சிகளை செய்வது, தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது போன்றவற்றுடன் உணவில் கட்டுப்பாடுடன் இருப்பது உடல் எடையைக் குறைக்க உதவும்.-Source: dinamani

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!