நான் படிக்கலை… டைரி எழுதி வைத்துவிட்டு சென்னை இளைஞர் எடுத்த விபரீத முடிவு!


வறுமை காரணமாக சாதிக்க முடியவில்லை என மனவேதனையில் இருந்த இளைஞர் ஒருவர் பெரம்பலூரில் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னையை சேர்ந்த முரளிதரன் 12ம் வகுப்பு படித்துவிட்டு பெரம்பலூரில் தனியார் டயர் தொழிற்சாலை பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு இரவு தான் தங்கியிருந்த அறையில் முரளிதரன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதை பார்த்த சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் முரளிதரன் உடலைக் கைப்பற்றி உடற் கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் சென்னையில் வசிக்கும் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. முரளிதரன் தங்கியிருந்த அறையை போலீசார் சோதனை செய்த போது முரளிதரன் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் எழுதி வைத்திருந்த டைரி ஒன்றை கண்டுபிடித்தனர். அதில் “எதிர்காலத்தில் நிறைய சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் அதற்கான கல்வியோ, வேலையோ என்னிடம் இல்லை. தற்போது கிடைக்கும் ஊதியத்தால் வறுமையும் தீரப் போவதில்லை.

எனவே, நான் தற்கொலை செய்துகொள்வதை என்னுடைய குடும்பத்தார் மன்னிக்க வேண்டும் என உருக்கமாக எழுதி உள்ளார். டைரியில் இப்படி குறிப்பிட்டிருந்தாலும் முரளிதரன் தற்கொலைக்கு ஆலையில் மனஉளைச்சல் தரும் வகையில் யாராவது நடந்து கொண்டார்களா அல்லது வறுமை காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். வாழ்க்கை என்பது வாழ்வதற்காகத்தான் சாதிக்க அல்ல என்பதை நிறைய இளைஞர்கள் உணராமலே தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.

மன அழுத்தம் உள்ளவர்கள் Sneha Suicide Prevention helpline – 044 -2464000 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொண்டு பேசினால் அதிலிருந்து வெளிவர ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.-Source: Times.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!