டெங்குனு பிறகு தான் தெரிஞ்சது..! 6 வயது மகனை பறிகொடுத்து கதறும் தம்பதி!


தர்மபுரி அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். விவசாயியான இவருக்கு திருமணமாகி நதியா என்ற மனைவியும், நிவாஷ் (வயது 6) என்ற மகனும் உள்ளனர்.

நிவாஷ் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் நிவாஷ் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தான். உடனே அந்த சிறுவனைஅவரது தந்தை சுரேஷ் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுவன் நிவாசுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

பின்னர் நிவாஷை மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 11-ந் தேதி சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை சிறுவன் நிவாஷ் பரிதாபமாக உயிரிழந்தான். இறந்து போன சிறுவனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

இதுகுறித்து அரசு மருத்துவ கல்லூரி டீன் கூறியதாவது:

தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இதுவரை 4 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இன்று காலை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்த சிறுவனுக்கு பரிசோதனையில் டெங்கு நெகடிவ் இருப்பதாக தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!