ஒரே நிமிடத்தில் எல்லாம் முடிந்தது..! பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட விபரீதம்!


12 வயதான இந்திய இளம்பெண் பிறந்தநாளன்று உயிரிழந்த சம்பவமானது சவுதி அரேபியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கேரளா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் ஷாஜி சாக்கோ. 20 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் சவுதி அரேபியா நாட்டிற்கு வேலை நிமித்தமாக இடம்பெயர்ந்தார். அங்கு அவருக்கு திருமணம் நடைபெற்றது. இவருக்கு 12 வயதில் மஹிமா சூசன் என்ற மகள் இருந்தார்.

மஹிமாவுக்கு நீண்டகாலமாகவே குணப்படுத்த முடியாத உடல்நல குறைபாடுகள் இருந்து வந்துள்ளன. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் அவருக்கு 12-வது பிறந்தநாள் வந்துள்ளது. சிறப்பான முறையில் கொண்டாடுவதற்காக குடும்பத்தினர் மிகப்பெரிய ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

கொண்டாட்டங்கள் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மஹிமா சூசன் மயங்கி விழுந்துள்ளார். அவர் மயங்கி விழுந்ததை கண்ட குடும்பத்தினர் பேரதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மஹிமா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். மஹிமாவின் இறப்பு செய்தியை கேட்டவுடன், அவருடைய குடும்பத்தினர் பேரதிர்ச்சி அடைந்தனர். மருத்துவமனையிலேயே உறவினர்கள் கதறி அழத்தொடங்கினார்.

பின்னர் அவருடைய உடலை பதப்படுத்தும் முறைகளை மருத்துவர்கள் மேற்கொண்டனர். அவருடைய உடலை இந்தியாவிற்கு எடுத்துவந்து இறுதிச்சடங்குகள் செய்யப்படுவதாக கூறப்படுகின்றன. இந்த செய்தியானது அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.-Source: times.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!