கண் தெரியாத காது கேட்காத முதல் மருத்துவர்… எங்கு தெரியுமா..?


கண், காது கேட்காவிட்டாலும், மருத்துவம் படிக்கும் மாணவி, பிரிட்டனின் முதல் டாக்டர் எனும் பெருமையை பெற்றுள்ளார்.

பிரிட்டனைச் சேர்ந்தவர் அலெக்சாண்ட்ரா ஆடம்ஸ். இவருக்கு கண் தெரியாது, காதும் கேட்காது. எனினும், தீவிர முயற்சிக்குப் பின், அவரது வலது கண்ணில் மிகச்சிறிய அளவு பார்வை சக்தி பெற்றிருக்கிறார். அதாவது, 5 சதவீத பார்வை மட்டும் வலது கண்ணில் உள்ளது. அதேசமயம், இடது கண் சுத்தமாக தெரியாது.

இந்நிலையில், பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பயிற்சி பெற்ற அலெக்சாண்ட்ரா ஒரு கட்டத்தில் மருத்துவம் படிக்க விரும்பினார். அதன்படியே தற்போது மருத்துவப் படிப்பில் சேர்ந்து 4வது ஆண்டு படித்து வருகிறார். இதுபற்றி அவர் கூறுகையில், ”கண் தெரிந்து, காது கேட்டால் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும் எனக் கூறுவது சரியல்ல.

மருத்துவம் படிப்பது ஒரு ஆத்மார்த்தமான அனுபவமாகும். அதனை உணர்ந்து படிப்பதை மட்டுமே நான்செய்கிறேன். பிரிட்டனின், கண் தெரியாத, காது கேட்காத முதல் மருத்துவர் நான்தான். எனினும், இந்த சாதனையை விட எனக்கு கிடைத்த அங்கீகாரத்தை தக்க வைத்துக் கொள்வதில்தான் நான் அதிக கவனம் செலுத்தி வருகிறேன்,” எனக் குறிப்பிடுகிறார்.-Source: times.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!