மட்டன் சூப் மர்டர் மாதிரி தோசை மாவில் விஷம் வைத்து அனுசுயா செய்த வேலையை பாருங்க!


“தினமும் டார்ச்சர்.. தூங்க விடறதே இல்லை.. அதான் தோசை மாவில் தூக்க மாத்திரையை கலந்து கொன்னுட்டேன்” என்று கணவனை கொன்ற மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார்.

புழல் பகுதியில் வசித்து வந்தவர் சுரேஷ். 5 வருஷத்துக்கு முன்னாடி விழுப்புரத்தில் நடந்த ஒரு கல்யாணத்துக்கு போனவர் அனுசுயாவை பார்த்ததும் காதல் கொண்டார். மண்டபத்திலேயே 2 பேருக்கும் லவ் ஆரம்பமானது.

வீட்டில் வந்து சொல்லவும், இரு தரப்பு பெரியவர்களும் இவர்களுக்கு கல்யாணம் செய்து வைத்தனர். புழல் பகுதியில் அனுசுயாவுடன் வீடு எடுத்து வாழ ஆரம்பித்தார். இவர்களுக்கு 4 வயதில் லோகேஷ் என்ற மகன் இருக்கிறான்.

இந்நிலையில் நேற்று சுரேஷ் திடீரென மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வந்ததால் இறந்துவிட்டதாக அனுசுயா ஒப்பாரி வைத்து கொண்டிருந்தார். ஆனால், போலீசார் சுரேஷின் கழுத்தில் இருந்த காயத்தை பார்த்ததும் அனுசுயாவை தனியாக கூப்பிட்டு விசாரித்தனர். அப்போதுதான் கணவனை கொன்றதை ஒப்புக் கொண்டார். போலீசாரிடம் அவர் சொன்னதாவது:

“என் மேல என் கணவனுக்கு ரொம்ப சந்தேகம். அவர் ஒரு கறிக்கடை நடத்தி வந்தார். வேலை முடிஞ்சதும் சாயங்காலம் ஆனால், தண்ணி அடிச்சிட்டுதான் வீட்டுக்கு வருவார். தினமும் தகராறு செய்வார்.. நிறைய சந்தேகம் அவருக்கு. அதனால தூங்க விடறதும் இல்லை.. என்னாலயும் நிம்மதியா தூங்க முடியல.

என் அக்கா பையன் முரசொலி மாறனுக்கும், எனக்கும் ஒரே வயசு. அவன்கூட பேசக்கூடாதுன்னு சொல்லுவார். எங்க 2 பேர் மேலயும் சந்தேகம் அதிகமாக இருந்தது. இதை அவன் கிட்ட சொல்லி நான் அழுதேன். “அவன் இனி உயிரோட இருக்கக்கூடாது.. பேசாமல் தோசை சுடும் மாவில் தூக்க மாத்திரை கலந்து தந்துடு. அவன் தூங்கிடுவான். அப்ப நாம ஈஸியா கொன்னுடலாம். நீயும், நானும் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கலாம்”ன்னு சொன்னான்.

அதன்படியே நான் வேலை பார்க்கிற மெடிக்கல் ஷாப்பில் இருந்து தூக்க மாத்திரையை எடுத்து பொடியாக்கி, மாவில் கலந்து தோசை சுட்டு தந்தேன். கொஞ்ச நேரத்தில் அவருக்கு சுயநினைவு போய்விட்டது. உடனே என் அக்கா பையனை கூப்பிட்டேன். அவன்தான் கழுத்தை நெரித்தான். என் துப்பாட்டாவை அதுக்கு தந்தேன். தழும்பு தெரியாதுன்னுதான் நினைச்சோம். ஆனா, அதுதான் எங்களை காட்டி தந்துடுச்சு” என்றார்.

இதையடுத்து அந்த அக்கா மகன் முரசொலி மாறன் போலீசில் சொல்லும்போது “என்மேல் அனுசுயாவுக்கு ரொம்ப பாசம். இதை அவரு தப்பா நினைச்சிட்டாரு. அனுசுயா என்னைக்கும் நிம்மதியா இருக்கணும். அதுக்குதான் இந்த ஐடியா தந்தேன்” என்றார். ஆட்டுக்கால் சூப்பில் விஷத்தை கலந்த ஜோலி சமாச்சாரத்தில் இருந்தே நாம் இன்னும் விடுபடாத நிலையில், இந்த தோசை மாவு கொலை நமக்கு பீதியை கிளப்பி விட்டுள்ளது.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!