நட்சத்திர விடுதி வாங்கிய பி.எம்.சி. வங்கி முன்னாள் தலைவர்… விசாரணையில் திடுக்கிடும் தகவல்.!


பி.எம்.சி வங்கி முறைகேட்டில் கைதான அந்த வங்கியின் முன்னாள் தலைவர் வர்யம் சிங், 400 கோடி ரூபாய் மதிப்புள்ள நட்சத்திர விடுதி ஒன்றை வாங்கியிருப்பது, விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட, பிஎம்சி வங்கியில் சுமார் 21 ஆயிரம் போலி கணக்குகள் மூலமாக 4 ஆயிரத்து 355 கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான மும்பை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையில், பி.எம்.சி வங்கியின் முன்னாள் தலைவர் வர்யம் சிங், அமிர்தசரசில், 400 கோடி ரூபாய் மதிப்புள்ள நட்சத்திர விடுதி ஒன்றை வாங்கியிருப்பது தெரியவந்திருக்கிறது.

இதுதவிர, ஹரியானா, மற்றும் இமாச்சல் பிரதேசத்திலும், நிலங்கள் உள்ளிட்ட சொத்துகளை, வர்யம் சிங் வாங்கி குவித்திருப்பதும் தெரியவந்திருக்கிறது. இந்நிலையில், துபாய்க்கு ஹவாலா முறையில் பணத்தை கொண்டு சென்று, அதனை மேத்தா என்பவர் பெயரில் மீண்டும் இந்தியாவில் முதலீடாக மாற்றியது பற்றி, பிஎம்சி வங்கியின் முன்னாள் மேலாண் இயக்குநர் ஜாய் தாமசிடம் விசாரணை நடைபெறுவதாக, மும்பை போலீசார் கூறியிருக்கின்றனர்.-Source: vivegam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!