பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் திடீர் ஆதரவு… ‘கோ பேக்’ என்று சொல்ல வேண்டாம்!


நாம் தான் ஓட்டுப்போட்டு ‘கம்’ என்றோம். இப்போது ‘கோ பேக் மோடி’ என்றால் எப்படி என்று பிரதமர் மோடிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திடீரென ஆதரவு தெரிவித்துள்ளார்.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனை, உலக பேட்மிண்டன் சாம்பியன் பி.வி.சிந்து நேற்று அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.

சந்திப்பு முடிந்த பின்னர் சிந்து கூறும்போது, “கமல்ஹாசனை நடிகராக எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன், மதிய உணவு சாப்பிட்டது, மறக்க முடியாதது” என்றார்.


பின்னர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

‘இந்தியாவுக்கு வெற்றி தேடி தந்த இந்த வீராங்கனையை, வரவேற்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். சீனாவில் இருந்து, 60 ஆண்டுகளுக்கு பின், ஒரு தலைவர் மாமல்லபுரம் வருவது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு.

இரண்டு தேசங்களுக்கும் நன்மை தரும் எந்த முடிவை எடுத்தாலும் அந்த முடிவு வெற்றி பெற வாழ்த்துகிறேன். சீன அதிபரிடம் வைக்க வேண்டிய கோரிக்கையை நம் பிரதமர் வைப்பார். அதை திறம்பட செய்ய வாழ்த்துகிறேன்.

நாம் தான் ஓட்டுப்போட்டு, ‘கம்’ என்றோம். இப்போது, ‘கோ பேக் மோடி’ என்றால் எப்படி? நம் விமர்சனங்களை எப்போதும் போல முன் வைப்போம். அதற்கு, சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுத்தாலும், நாம் நேர்மையாக நடப்போம்’.

இவ்வாறு அவர் கூறினார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!