இன்னும் இருப்பது 8 மாதங்கள் தான்.. இறுதி சடங்குக்கு தானே தயாராகும் 8 வயது சிறுமி!


தான் கூடிய விரைவில் இறக்க போவதை அறிந்த 8 வயது சிறுமி தன்னுடைய இறுதி சடங்குகளுக்கான ஏற்பாடுகளை செய்து வருவது அமெரிக்காவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டார்சி மெக்குயிர் என்ற 8 வயது சிறுமி ஸ்காட்லாந்தில் வசித்து வருகிறார். இவர் “கார்டோராமா” என்ற வித்தியாசமான புற்றுநோய் இருந்துள்ளது. இதனை மருத்துவர்கள் தாமதமாக கண்டுபிடித்தனர். டார்சிக்கு இந்த புற்றுநோய் இருப்பது ஜனவரி மாதத்தில் உறுதி செய்யப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு முன்னர் டார்சிக்கு முதுகில் சிறிய கட்டி தோன்றியுள்ளது.

இந்த கட்டிக்காக தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் சோதனைகள் நிகழ்த்தப்பட்டன. ஆனால் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். டார்சிக்கு தொடர்ந்து உடல் நிலை சரியில்லாமல் போனது மருத்துவர்களிடம் நிறைய முறை அழைத்து செல்லப்பட்டார். ஆனால் அப்போதும் மருத்துவர்களால் சரிவர கண்டுபிடிக்க இயலவில்லை.

இந்நிலையில் ஜனவரி மாதத்தில் தினமும் மயங்கி விழுந்து கொண்டிருந்தார். இதனால் பயந்துபோன மருத்துவர்கள் அவருக்கு அனைத்து சிகிச்சைகளையும் மேற்கொண்டனர்.

அப்போதுதான் மருத்துவர்களுக்கு அவருக்கு அரிய வகை புற்றுநோய் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அந்த புற்றுநோயானது கை,கால், நுரையீரல் ஆகிய பகுதிகளில் பரவியதால் சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.

இன்னும் 8 மாதங்களுக்கு மட்டுமே சிறுமி உயிரோடு இருப்பார் என்றும் மருத்துவர்களால் கூறப்பட்டது. அவர் இறந்து போவதை டார்சியின் தாயார், ஏற்கனவே அவரிடம் கூறியுள்ளார். தன்னுடைய இறுதி சடங்குகளை சிறுமி வகுத்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

அவருடைய மேல்சிகிச்சைக்காக தற்போது குடும்பத்தினர் நிதி திரட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவமானது ஸ்காட்லாந்து நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியது.-Source: times.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!