லிப் டு லிப்… ஆண் போட்டியாளருக்கு மசாஜ் செய்த பெண் போட்டியாளர்! பிக்பாஸ் புதிய சர்ச்சை!


இந்தி மொழியில் கடந்த 12 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 13-வது சீசன் சென்ற மாதம் 29-ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனையும் பாலிவுட் நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்குகிறார்.

சீசன் தொடங்கி 4 நாட்களே ஆகியிருக்கும் நிலையில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. தொடங்கிய முதல் நாளன்றே உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கும் டாஸ்க் அளிக்கப்பட்டது. இந்த சமூக வலைத்தளங்களில் கடுமையான கண்டனத்திற்கு ஆளானது. தற்போது சக போட்டியாளர்கள் மசாஜ் செய்து கொள்ளும் காட்சிகள் பிக்பாஸ் வீட்டில் இடம்பெற்று வருகின்றன.

நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் ஷெஹ்னாஸ் கில், பராஸ் சோப்ரா என்பவருக்கு மசாஜ் செய்து கொள்வது போன்ற காட்சிகள் அமைந்திருந்தன. இதன் தொடக்கமானது சமையலறையில் நிகழ்ந்தது. தனக்கு அளிக்கப்பட்ட டாஸ்குகளினால் ஷெஹ்னாஸ், பராஸிடம் கோபத்துடன் பேசுகிறார். அப்போது அவரை நோக்கி நீங்கள் அஷீமுக்கு மட்டும் மசாஜ் செய்தீர்கள். ஆனால் எனக்கு செய்யவில்லை என்று கூறினார். மசாஜ் செய்வது குறித்து இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டன.

இறுதியில் ஷெஹ்னாஸ் கில், பராஸ் சோப்ராவுக்கு உடல் மசாஜ் செய்து விடுகிறார். இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.-Source: times.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!