10 வயது சிறுமியை கொன்று குவாரியில் வீசிய தொழிலாளி – காட்டிகொடுத்த ஒத்தசெருப்பு..!


திண்டிவனம் அருகே 10 வயது சிறுமியை கற்பழித்து கொன்று குவாரியில் வீசிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் அருகே நல்லாளம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. அவரது மகள் கவிதாஸ்ரீ(வயது10). இவர் திண்டிவனத்தில் உள்ள தொடக்க பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 3 -ந்தேதி காலையில் வீட்டின் அருகே உள்ள மளிகை கடைக்கு சென்றார். பல மணி நேரமாகியும் வீட்டிற்கு வராததால் பெற்றோர்கள் கடைக்கு தேடி சென்றனர். எங்கு தேடியும் மாணவி கிடைக்கவில்லை.

இதுகுறித்து கவிதாஸ்ரீயின் தாய் துர்கா தேவி பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதனைத்தொடர்ந்து போலீசார் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கொண்டு குழந்தை கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி அவரது வீட்டின் பின்புறமுள்ள அந்த பகுதியில் உள்ள கல்குவாரி தண்ணீரில் கவிதாஸ்ரீ பிணமாக மிதந்தார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனையில் மாணவி கவிதாஸ்ரீ கற்பழித்து கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். அப்போது ஒத்த செருப்பு அங்கு கிடந்தது.

அதை கைப்பற்றிய போலீசார் கொலையுண்ட மாணவியின் தாயார் துர்கா தேவியிடம் வந்தனர். போலீசார் அவரிடம் இந்த ஒத்த செருப்பு யாருடையது என்று தெரியுமா? என கேட்டனர். உடனே இந்த செருப்பு பக்கத்து வீட்டை சேர்ந்த கூலி தொழிலாளி மகேந்திரனுடையது என தெரிவித்தார்.

உடனே மகேந்திரனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார். கிடுக்கிப்பிடி விசாரணையில் மாணவி கவிதாஸ்ரீயை கற்பழித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் அவரை கைதுசெய்தனர்.

போலீசில் மகேந்திரன் அளித்து உள்ள வாக்குமூலம் விவரம் வருமாறு:-

எனக்கும், கிருஷ்ண மூர்த்திக்கும் முன்விரோதம் இருந்தது. எனவே எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. எனவே கிருஷ்ணமூர்த்திக்கு பாடம் கற்பிக்க முடிவு செய்தேன். அதன்படி சம்பவத்தன்று கடைக்கு வந்த கிருஷ்ணமூர்த்தியின் மகள் கவிதாஸ்ரீயை நைசாக பேசி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தேன். அதன்பின்னர் அவளை கொன்று கல்குவாரி தண்ணீரில் வீசினேன். நான் விட்டு சென்ற ஒத்த செருப்பு என்னை காட்டிக்கொடுத்து விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

கைதான மகேந்திரன் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

நடிகர் பார்த்திபன் நடித்த ஒத்தசெருப்பு படத்தில் குற்றவாளியை கொலை நடந்த இடத்தில் கிடந்த ஒத்த செருப்பை வைத்து கண்டுபிடிப்பார்கள்.

அதே போல் திண்டிவனத் தில் மாணவியை கொன்ற குற்றவாளியை ஒத்த செருப்பை வைத்து போலீசார் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!