உண்மையான டைட்டில் வின்னர் தர்ஷன் தான் – வருத்தம் தெரிவித்த சேரன்!!


பிக் பாஸ் 3 நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இன்னும் ஒரே வாரத்தில் பைனல்ஸ் நடக்கவுள்ள நிலையில், யார் டைட்டிலை வெல்வார்கள்? என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டுள்ளனர்.

வார இறுதியான நேற்று கமல் ஹாசன் மக்கள் முன் தோன்றிப் பேசினார், வழ வழ என இழுக்காமல் நேரடியாக நாமினேஷனுக்கு வந்தார். அதன்படி, அறிவிக்கையில், லாஸ்லியா முதலில் காப்பாற்றப்பட்டதாக அறிவித்தார் பிக் பாஸ்.

இரண்டாவதாக ஷெரின் காப்பாற்றப்பட்டார். அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து நேற்று தர்ஷன் வெளியேற்றப்பட்டார்.

இதுகுறித்து சேரன் ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளார். அதாவது அந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்குத் தேவையான அனைத்து தகுதிகளையும் பெற்ற ஒருவர் நீக்கப்பட்டிருப்பது வேதனைக்குரிய விஷயம்.

அவர் தான் டைட்டிலை வெல்லத் தகுதியானவர் என்பதை சக போட்டியாளராக நான் பார்த்துள்ளேன். இது எனக்கு வருத்தமளிக்கிறது என்று கூறியுள்ளார்.-Source: tamil.minutes

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!