உன்ன வெளிய வந்துட்டு பொளக்குறோம் முகென் அதிரடி – வெளியானது வீடியோ .!


பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ரசிகர்களின் ஆர்வம் மற்றும் விறுவிறுப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.

உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிய உள்ள நிலையில் தற்போது சுவாரஸ்யம் அதிகரித்து வருகிறது.

பிக் பாஸ் சீசனில் எந்த போட்டியாளர்களும் செய்யாததை இந்த சீசன் போட்டியாளரான கவின் செய்து உள்ளார்.

அதாவது, பிக் பாஸ் அளித்த ஐந்து லட்சம் ரூபாவை கவின் எடுத்து கொண்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இதற்கு முன் இரண்டு, முதல் சீசன் போட்டியாளர்கள் யாரும் இது போன்று செய்யவில்லை. மக்கள் எங்களை நம்பி ஓட்டு போட்டு உள்ளார்கள் நாங்கள் பணத்திற்காக அவர்கள் நம்பிக்கையை இழக்க மாட்டோம் என்று தெரிவித்தார்கள்.

ஆனால், கவின் பிக் பாஸ் அறிவித்த உடனே பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறினார்.

இதனை தொடர்ந்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ள போட்டியார்கள் கவின் வெளியேறியதை பற்றி பேசி உள்ளார்.

அதில் சாண்டி உன்னை நிறைய கேள்வி கேட்க வேண்டி உள்ளது என்றும், அதனை தொடர்ந்து முகென் பொளக்குறோம் என்றும் கூறினார்கள்.-Source: kalakkal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!