சற்று முன்னர் பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்


தெலுங்கு சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் வேணு மாதவ் உடல்நலக் குறைவால் காலமானார். மிமிக்ரி கலைஞராக இருந்து நகைச்சுவை நடிகராக மாறியவர் வேணு மாதவ். 1996–ம் ஆண்டு ‘சம்பிரதாயம்’ என்ற படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்தார். இதுவரை 170 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழிலும் ‘என்னவளே’, ‘காதல் சுகமானது’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக 2016-ல், ‘டாக்டர் பரமானந்தய்யா’ ஸ்டூடண்ட்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். கடந்த மூன்று வருடங்களாக கல்லீரல் பிரச்சினை காரணமாக சிகிச்சை மேற்கொண்டு வந்திருந்த வேணு மாதவ், படங்களில் நடிக்கவில்லை. இரண்டு வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேணு மாதவ் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். வேணு மாதவ்வின் மறைவுக்கு தெலுங்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.-Source: dinakaran

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!