அமெரிக்கா – திருமணமாகி 7 ஆண்டுகளின் பின் குழந்தை பெற்றெடுத்த பெண்ணால் ஆச்சரியம்…!


அமெரிக்காவில் 24 ஆண்டுகளாக உறைநிலையில் இருந்த கருவின் மூலம் பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தைச் சேர்ந்த டினா கிப்சன் மற்றும் பெஞ்சமீன் கிப்சன் தம்பதியருக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகின்றன. அவர்களுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது.


இதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்த குழந்தையின் கரு 24 ஆண்டுகளுக்கு முன் உள்ளது. பல ஆண்டுகளாக கருவானது உறை நிலையில் பாதுகாக்கப்பட்டு வந்தது.

பின்னர் அது டினாவின் கருக்குழாயினுள் செலுத்தப்பட்டு இயற்கையான முறையில் குழந்தை பிறந்தது. அதிக ஆண்டுகள் உறைநிலையில் இருந்த கரு மூலம் குழந்தை பெற்றவர் என்ற நிலையில் டினாவின் குழந்தை உலக சாதனைப் படைத்துள்ளது.

இந்த கரு 1992-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ல் இருந்து பாதுகாக்கப்பட்டு வந்தது. 2011-ம் ஆண்டு நியூயார்க்கில் 20 ஆண்டுகள் உறைநிலையில் இருந்த கரு மூலம் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. – Source : maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!