பிக்பாஸ் வீட்டிற்குள்ள யாரு வந்திருக்காங்கனு பாருங்களேன்! வீடியோ இதோ.!.


2-வது சீசனில் கலந்து கொண்டு தற்போது படங்களில் பிசியாக நடித்து வரும் இருவர் விருந்தினராக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பல பிரபலங்கள் இன்று முன்னணி நடிகர், நடிகைகளாக வலம் வருகின்றனர். தற்போது பிக்பாஸ் 3 நிகழ்ச்சி நடந்து வருகிறது. 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சி தற்போது 90 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது.

16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 6 போட்டியாளர்கள் உள்ளனர். இதில் முகின் கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில் வென்று இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார். மற்ற 5 போட்டியாளர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில், பிக்பாஸ் 2-வது சீசனில் கலந்து கொண்டு தற்போது படங்களில் பிசியாக நடித்து வரும் மகத் மற்றும் யாஷிகா ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். விருந்தினராக சென்றுள்ள அவர்கள் ஒருவாரம் பிக்பாஸ் வீட்டில் தங்க உள்ளதாக கூறப்படுகிறது.

மகத் மற்றும் யாஷிகா தற்போது ‘இவன் தான் உத்தமன்’ என்கிற படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். ஹாரர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் ராமதாஸ், மா.கா.பா. ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமிழ், கன்னடம் ஆகிய இரண்டு மொழிகளில் இந்தப் படம் தயாராகி வருகிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!