6 முறை கருச்சிதைவு! குழந்தைக்கு பிறகு நேர்ந்த பரிதாபம்! கதறி அழும் தாய்!


அமெரிக்காவில் விபத்தில் சிக்கி சுயநினைவு இழந்தவரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச். அந்த நபர் தனது கையில் கட்டி இருந்தஆப்பிள் வாட்ச் அனுப்பிய குறுஞ்செய்தி மற்றும் இடத்தை வைத்து மீட்புப்படையினர் மீட்டுள்ளனர்.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் தனது தந்தைக்கு விபத்து நடந்திருப்பதை அவர் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச் விபத்து நடந்த செய்தியையும் நடந்த இடத்தையும் தெளிவாக அவரது மகன் கபே பர்தெத் என்பவர்க்கு குறுஞ்செய்தியாக அனுப்பியுள்ளது.

கபே பர்தெத் என்பவரின் தந்தை தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.அப்போது ஆள்நடமாட்டமே இல்லாத பகுதியில் திடீரென அவரது வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்நிலையில் தனது சுயநினைவை இழந்த அவர் சிறிது நேரம் யாரும் வராத நிலையில் அதே இடத்தில் கிடந்துள்ளார்.

இந்நிலையில் அவர் கையில் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச் சேதமடைந்த நிலையில் விபத்து நடந்து இருப்பதை உறுதிசெய்து நடந்த இடத்தையும், நபர் சுயநினைவை இழந்து கிடப்பதாகவும் குறுஞ்செய்தியை அவரது மகன் மற்றும் அவசர சேவை மருத்துவமனைக்கு மற்றும் அவசர அழைப்புக்காக கொடுக்கப்பட்ட எண் இரண்டிற்கும் குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளது.

இதையடுத்து செய்தியை பார்த்ததும் கபே பர்தெத் மற்றும் அவரது குடும்பத்தார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சென்று பார்த்தபோது அந்த இடத்தில் யாரும் இல்லை இந்நிலையில் இதுகுறித்து தனது தந்தையின் எண்ணிற்கு போன் செய்தபோது காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததாக தகவல் வந்தது. இந்நிலையில் அவரது இரு சக்கர வாகனம் காவல் நிலையத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த காலகட்டத்தில் விபத்து ஏற்பட்டால் மனிதர்களை கண்டுகொள்ளாத நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் கைக்கடிகாரம் இச்செயலை செய்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுபோன்ற தொழில்நுட்ப பொருள்கள் ஆடம்பரமாக தெரிந்தாலும் சில நேரங்களில் நமக்கு உதவக்கூடிய அத்தியாவசிய பொருளாக மாறுகிறது. இது போன்ற செயலி மற்றும் உபகரணங்கள் தங்களது வாழ்க்கைக்கு மிகவும் அவசியம் என அனைவரிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.-Source: times.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!