கழுத்தளவு தண்ணீரில் வந்த கருப்பாயி சடலம்.. பாடையை தோளில் சுமந்து வந்த அவலம்..!


கருப்பாயி எப்படி எல்லாம் வாழ்ந்தவரோ தெரியவில்லை.. ஆனால் அவரது இறுதி ஊர்வலம் மிக கொடுமையாக அமைந்து விட்டது. கழுத்தளவு தண்ணீரில் தோளில் சுமந்தபடி.. நீந்தி நீந்தி கரைசேரும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே சேர்பாடி என்ற கிராமம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்தப் பகுதியில் அமைந்துள்ள சுடுகாட்டிற்கு செல்ல இவர்களுக்கு பாதை இல்லை.

அதனால், கானாறு வழியாகத்தான் எந்த சடலத்தையும் கொண்டு செல்ல முடியும். இந்த கானாறு ஆபத்தானது.. அவ்வளவு சுலபத்தில் நீந்தி கரை சேர முடியாது. இப்படியே பல வருஷமாக இந்த அவலம் இருந்து வருகிறது.

கானாறு வழியாக ஒரு பாலம் கட்டி தருமாறு இந்த பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு எத்தனையோ முறை கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் கருப்பாயி பாட்டி இறந்துவிட்டார். இவ்வளவு நாள் உடம்பு சரியில்லாமல் இருந்தவர், நேற்று உயிரிழந்தார்.

உயிரிழந்த கருப்பாயி பாட்டியின் சடலத்தையும், இதே ஆற்று தண்ணீரில்தான் மக்கள் கொண்டு வந்துள்ளனர். 2 நாளைக்கு முன்னாடி பெய்த மழையல் கானாறில் நிறைய தண்ணீர் ஓடுகிறது. இந்த கழுத்தளவு தண்ணீரில் சடலத்தை தோளில் வைத்து நீந்தி நீந்தி கரையை நோக்கி வருகிறார்கள் மக்கள். இப்படியே சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு சடலத்தை தூக்க வருகிறார்கள்.

ஆர்ப்பரித்து ஓடும் நீரில், பாடையை தூக்கி கொண்டு நீந்தி வரும் இந்த காட்சியை அங்கிருந்தோர் செல்போனில் வீடியோ எடுத்து வெளியிடவும், அது இப்போது வைரலாகி வருகிறது.

எப்படியாவது இந்த மக்களக்கு ஒரு பாலம் கட்டி தரக்கூடாதா என்ற பலமாக கோரிக்கையும் எழுந்து வருகிறது. 3 வருஷமா உள்ளாட்சி தேர்தலை நடத்தல.. அப்படி நடத்தியிருந்தால் இப்படியெல்லாம் ஒரு அவல நிலை மக்களுக்கு ஏற்படுமா என்ற கேள்வியும் பரவலாக எழுந்து வருகிறது.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!