விமானத்தில் பயணம் செய்ய முதல் இதையெல்லாம் தெரிந்து வைச்சிருங்க..!


தங்களுடைய நிறுவனத்தை சேர்ந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளை கவர்வதற்காக., விமான நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை வரி வழங்குகிறது.

சலுகைகள் மட்டும் இல்லாமல்., இன்னபிற வசதிகளையும் விமான பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் வழங்குகின்றன.

அவற்றை பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம் வாங்க…


உங்களுக்கு பசியாக இருந்தால், வேண்டுமென்ற உணவை விமானத்தில் கேட்டு பெறலாம். திரும்பவும் கூட கேட்கலாம். கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு., சில விமானங்களில் உள்ள சமையலறைக்கே உங்களை அழைத்து செல்வார்கள்.

குழந்தைகளின் விளையாட்டுத்தனம் அதிகமாகும்போது, அல்லது உங்கள் துணையுடன் நீங்கள் தனிமையை அனுபவிக்க வேண்டும் எனும்போது குழந்தைகளை பராமரிக்கவும் ஒருசில விமானங்களில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


சில விமானங்களில் விமானம் எப்படி இயங்குகிறது. எங்கிருந்து அழைப்பு கிடைக்கிறது. எப்போது கிளம்பவேண்டும். எப்போது இறங்கவேண்டும் என்பதுபோன்ற ரகசியங்கள் தவிர்த்த சில விசயங்கள் பயணிகள் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதலுதவி மருந்துகள் மற்றும் பிற அவசரத்துக்கு தேவையான மருந்துகள் விமானத்திலேயே உங்களுக்கு கிடைக்கும்.

பொதுவாக விமானத்தில் கொடுக்கப்பட்ட இருக்கையில் மட்டுமே அமரவேண்டும் என்பது விதி. சில விமானங்கள் கட்டுப்பாடுகளுடன் சில சமயங்களில் இருக்கையை மாற்றித் தருகின்றன.

பிறந்தநாள், திருமண நாள் போன்ற சிறப்பு நிகழ்வுகளுக்கு விமானத்திலேயே கேக்குகள் தரப்படுகின்றன. சில விமான நிறுவனங்கள் உங்கள் பிறந்த நாளை தெரிந்துகொண்டு அவர்களாகவே கேக் அளித்து சிறப்பு செய்கின்றனவாம்.

விமானத்தில் அவசரகதியில் உயில் எழுதவும் வாய்ப்பு தரப்படுகிறதாம். இது மிக மிக அரிய நிகழ்வாகும்.சில விமான சேவை நிறுவனங்கள் தவிர்த்து சானிட்டரி நாப்கின்களை பெரும்பாலான விமானங்களில் தரப்படுகின்றன.

மதுப் பிரியர்கள் உற்சாகப் பானங்களை அளவோடு பருக விமான நிறுவனங்கள் வாய்ப்பளிக்கின்றன.-Source: seithipunal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!