வேலைக்காரரை கால்களில் முத்தமிட வைத்த சவூதி இளவரசி! பிறகு நடந்த தரமான சம்பவம்!


பிரான்சில் வீட்டு வேலை செய்து கொண்டிருந்த பணியாளரை அடித்து காலில் முத்தமிட வைத்த சவுதி இளவரசிக்கு அந்நாட்டு நீதிமன்றம் 10 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சவுதி நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மான் என்பவரின் சகோதரியான இளவரசி ஆசா பின் சல்மான் 43, பாரிஸ் நகரத்தில் உள்ள தனது தந்தையின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த ஒரு நபர் தன்னை புகைப்படம் எடுப்பதாக கூறி தனது பாதுகாவலர்களை வைத்து அந்த நபரை சரமாரியாக அடிக்க சொல்லியுள்ளார்.

இந்நிலையில் அவரது பாதுகாவலர்களும் அந்த நபரை கடுமையாக தாக்கி உள்ளனர். பின்னர் இளவரசியின் காலில் முத்தமிடவும் வைத்துள்ளனர். இந்நிலையில் பணியாளர் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் இளவரசி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதையடுத்து அவருக்கு 10 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் 10000 யூரோ அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இளவரசி அந்த சிறை தண்டனையை உடனடியாக அனுபவிக்க தேவையில்லை எனவும் தீர்ப்பை தொடர்ந்து அவர் நடந்து கொள்ளும் விதத்தை அடிப்படையில் அவர் சிறை செல்ல வேண்டுமா அல்லது தண்டனையை ரத்து செய்யப்படுமா என்பது குறித்து நீதிபதி முடிவு கூறுவார் எனவும் தெரிகிறது.

இந்நிலையில் இளவரசியின் உத்தரவுப்படி அவரைத் தாக்கிய நபர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது இந்நிலையில் அவரது பாதுகாவலரான ரேணி என்பவருக்கு 8 மாத சிறை தண்டனையும் 5,000 யூரோக்கள் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி கேட்டபோது அதற்கு அந்த பணியாளர் தன்னை இளவரசியின் பாதுகாவலர் அடித்து துன்புறுத்தும் போது இளவரசி அந்த நாயைக்கொல் அவனுக்கெல்லாம் வாழ தகுதி இல்லை என கூறியதாகவும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் பணியாளருக்கு ஆதரவாக கோர்ட்டில் வாதாடிய வழக்கறிஞர் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்பதை இந்த தீர்ப்பு நிரூபித்துள்ளது என தெரிவித்துள்ளார்.-Source: times.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!