நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் குளியல் போட்ட வீடியோவை வெளியிட்ட ஷாலு ஷம்மு.!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையான ஷாலு சாமு, வருத்தப்படாத வாலிபர் சங்கம், றெக்க மற்றும் Mr.லோக்கல் போன்ற திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார்.

சமீபத்தில் இவர் தன்னுடைய காதலருடன் இணைந்து நடனம் ஆடிய வீடியோ பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். நடிகை ஷாலு, ராஜ் என்பவரை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் நெருக்கமாக இணைந்து நடனம் ஆடுவது போல் உள்ளது அந்த வீடியோ பதிவு. தற்போது ஷாலு சாமு, மீண்டும் ஒரு புதிய வீடியோ பதிவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .

அந்த வீடியோ பதிவில் அவர் கவர்ச்சிகரமான நீச்சல் உடை அணிந்து கொண்டு நீச்சல் குளத்தில் இருப்பது போல காட்சி அளிக்கிறது. ஷாலுவிடம் பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் ஒருவர் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் விஜய் தேவர்கொண்டாவை வைத்து இயக்கும் திரைப்படத்தில் வாய்ப்பு தருவதாக கூறியுள்ளார். இதற்காக ஷாலுவை தன்னுடன் உல்லாசமாக இருக்க அழைத்ததாக இயக்குனர் மீது நடிகை புகார் கூறியுள்ளார்.

இயக்குனர் ஆசைக்கு இணங்காததால் நடிகர் விஜய் தேவர்கொண்டா திரைப்படத்தில் நடிக்கும் மிகப்பெரிய வாய்ப்பை இழந்ததாகவும் கூறினார். இந்த செய்தியை ஷாலு தன்னுடைய ரசிகர்களிடம் இன்ஸ்டாகிராமில் சேட் செய்த போது, ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலாக கூறினார். நடிகை ஷாலு “மீ டூ” புகாரை முன்வைப்பது அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியது .- Source: -timestamil


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.