விநாயகர் சதுர்த்தி விழாவில் ரஜினி ரசிகர் படுகொலை..!


திருச்சி அருகே விநாயகர் சதுர்த்தி விழாலில் ரஜினி ரசிகர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் லால் குடி சின்னசெட்டி தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி மகன் பார்த்தசாரதி (வயது 20). ரஜினி ரசிகரான இவர் பிளஸ்-2 வரை படித்து விட்டு வேலைக்கு சென்று வந்தார்.

விநாயகர் சதுர்த்தியை யொட்டி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து அந்த பகுதியில் விநாயகர் சிலை வைக்கப்பட்டது. இதனை பார்த்தசாரதி, ஐஸ்வர்யா நகரை சேர்ந்த தினேஷ்குமார் (22) மற்றும் இளைஞர்கள் வைத்திருந்தனர்.

நேற்று விநாயகர் சிலைக்கு பல்வேறு பூஜை களை செய்யப்பட்டது. இந்த சிலையை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராள மானோர் வந்து தரிசனம் செய்து வழிபட்டனர். பிற் பகலில் இளைஞர்கள் சிலர் சேர்ந்து மது அருந் தியுள்ளனர். அப்போது விநாயகர் சிலை அமைப்பதற்காக பணம் வசூல் செய்ததில் தினேஷ் குமார் பணத்தை ஏமாற்றி விட்டதாக பார்த்தசாரதி கூறியுள்ளார்.

ஏற்கனவே இருவருக்கும் இடையே பெண்ணுடன் காதல் பிரச்சினை தொடர் பாக முன்பகை இருந்து வந்தது. இந்தநிலையில் பணம் மோசடி புகாரையும் கூறியதால் பார்த்தசாரதி மீது தினேஷ்குமார் ஆத்திரம டைந்தார். பார்த்தசாரதியிடம் அவர் தகராறிலும் ஈடுபட் டார். இருவருக்கும் ஏற்பட்ட கைகலப்பை அருகில் இருந்த வர்கள் விலக்கி சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் நள்ளிரவு 1 மணிக்கு அதே பகுதியை சேர்ந்த நண்பர் கார்த்திக் கேயன் என்பவர் தினேஷ் குமாரிடம் பணத்தை ஏமாற் றியது குறித்து கேட்டுள்ளார். அதற்கு இந்த தகவலை யார் உனக்கு கூறியது? என தினேஷ் குமார் விசாரித்துள் ளார். அப்போது தனக்கு பார்த்தசாரதி தான் கூறினார் என கார்த்திக்கேயன் தெரிவித்தார்.

இதனால் பார்த்தசாரதி மீது தினேஷ்குமாருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. உட னேயே சின்னசெட்டித்தெருவில் உள்ள பார்த்தசாரதியின் வீட்டிற்கு சென்று தூக்கத் தில் இருந்தவரை எழுப்பி அங்குள்ள கற்பக விநாயகர் கோவில் பகுதிக்கு அழைத்து சென்று விளக்கம் கேட்டார்.

அப்போது மீண்டும் இரு வருக்கும் வாக்குவாதம் ஏற் பட்டது. திடீரென தினேஷ் குமார் தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பார்த்த சாரதியின் கழுத்தில் குத்தி னார். இதைப்பார்த்து அதிர்ச் சியடைந்த அவருடன் சென்ற நண்பர் கார்த்திக்கேயன் தடுக்க முயன்றார். இதில் அவரது இடது கையிலும் கத்திக்குத்து விழுந்தது.

கார்த்திக்கேயனின் அல றல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். கழுத்தில் கத்திகுத்து விழுந்த தால் அதிக அளவில் ரத்தம் வெளியேறி பார்த்தசாரதி உயிருக்கு போராடினார். அவரை உடனடியாக ஆஸ் பத்திரிக்கு கொண்டு சென்ற னர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். கார்த்திக்கேயன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகுமார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். தொடர்ந்து அந்த பகுதியில் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!