விஷாலின் கன்னத்தில் ஓங்கி அறைந்த முன்னாள் காதலி..! பதற வைத்த வீடியோ..!


நடன நிகழ்ச்சிக்காக பயிற்சி எடுத்தபோது நடிகை மதுரிமா துலி தனது முன்னாள் காதலரான விஷால் ஆதித்யா சிங்கை அறைந்துள்ளார்.

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் மதுரிமா துலியும், விஷால் ஆதித்யா சிங்கும் காதலித்து திருமணம் கூட நிச்சயிக்கப்பட்டது. ஆனால் திருமணம் நிச்சயமான வேகத்தில் பிரிந்துவிட்டனர்.

மதுரிமாவுக்கு வேறு ஒரு நடிகருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக விஷால் தெரிவித்தார். அதை மதுரிமா மறுத்தார். இப்படி எப்பொழுது பார்த்தாலும் மோதிக் கொண்டிருக்கும் அவர்களை சல்மான் கான் தயாரிக்கும் நாச் பால்யே 9 நடன நிகழ்ச்சியில் ஜோடியாக ஆட வைத்துள்ளனர்.

நிகழ்ச்சிக்காக ஒத்திகை பார்க்கும்போது மதுரிமாவும், விஷாலும் அடிக்கடி சண்டை போடுகிறார்ள். இந்நிலையில் நேற்று மாலை ஒத்திகை நடந்த போது விஷால், மதுரிமா இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி மதுரிமா விஷாலை கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டார்.

சிசிடிவி கேமராவில் பதிவாகியிருப்பதாவது,

மதுரிமாவும், விஷாலும் ஆக்ரோஷமாக விவாதிக்கின்றனர். அப்பொழுது மதுரிமா கோபமாக ஒரு ஓரமாக செல்ல, விஷாலும் பின்னாலேயே செல்கிறார். இதையடுத்து நடனக்குழுவை சேர்ந்த அனைவர் முன்பும் மதுரிமா விஷாலை அறைந்துள்ளார்.

முன்னாள் காதலர்களை ஜோடியாக ஆட வைத்தால் இந்த சண்டை எல்லாம் ஏற்படும் என்பது சல்மான் கானுக்கு தெரியாமல் இல்லை. இருப்பினும் இந்த சண்டை சச்சரவும் நிகழ்ச்சிக்கு உதவும் என்று நினைக்கிறார்கள்.

சொல்லப் போனால், முன்னாள் காதலர்கள் கலந்து கொண்டுள்ளதாலேயே பலர் நாச் பால்யே நிகழ்ச்சியை பார்க்கிறார்கள். மேடையில் விஷால் போலியாக இருப்பதாக மதுரிமா குற்றம் சாட்டினார். அதற்கு விஷாலோ நான் உண்மையாகத் தான் இருக்கிறேன், மதுரிமா வேண்டும் என்றே புகார் கூறுகிறார் என்றார்.

நாச் பால்யே நிகழ்ச்சியை விட இந்த மதுரிமா, விஷால் சண்டை பற்றி தான் அதிகம் பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.-Source: filmibeat

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!