டாய்லெட்டில் கசமுசா செய்தால்… கதவு திறக்குமாம்.. அலாரம் கத்துமாம்..!


இங்கிலாந்தில் உள்ள கழிப்பறையில் உடலுறவு கொள்வதை தடுக்கும் நோக்கில் அந்த நகர நிர்வாகம் ஒரு ஆபரேஷனை கையில் எடுத்துள்ளது.

இங்கிலாந்தில் வேல்ஸ் நகரில் நிறைய பேர் வீட்டை தவிர்த்து பொது இடங்களில் செக்ஸ் வைத்து கொள்ள விரும்புகிறார்கள். அதுவும் இரவு நேரங்களில் பொது இடங்கள் பெரும்பாலானவை இது போன்ற காரியங்களுக்கு பயன்படுகிறது.

கழிப்பறைகளை கூட மக்கள் விட்டு வைக்காமல் அங்கும் மக்கள் செக்ஸ் வைத்துக் கொள்கின்றனர். இதனால் பெரும் இன்னல்களை நகர நிர்வாகம் சந்திக்கிறது. மேலும் ஆண் பெண், இருபாலரும் பயன்படுத்தும் கழிப்பறை என்பதால் ஒரே சமயத்தில் இருவரும் நுழைந்து இது போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர்.

இதுகுறித்து போர்த்கால் நகர கவுன்சில் சில அதிரடி திட்டங்களை உள்ளூர் அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளது. இதற்கு இந்திய மதிப்பில் பல கோடிகளை ஒதுக்கவும் திட்டமிட்டுள்ளது.

மேலும் கழிப்பறைகளை நவீனப்படுத்தும் திட்ட ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு கழிப்பறையில் ஒருவரை மட்டுமே நுழையும்படியாக எடை உணரும் தரைகள் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அப்போதுதான் ஆண், பெண் இருபாலரும் நுழைவது தடுக்கப்படும்.

மேலும் அதையும் மீறி ஆண், பெண் இருவரும் ஒரே கழிப்பறையில் நுழைந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டால் உடனே அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கும். பின்னர் கதவும் படார் என திறந்துவிடும். அலாரமும் அடிக்கும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளது.

இதிலும் மக்கள் அடங்காவிட்டால் பொது கழிப்பறைகளுக்கு சென்று குறிப்பிட்ட நேரத்துக்கும் மேல் அதிலேயே இருந்தால் உடனே அலாரம் அடித்து அங்குள்ள விளக்குகள் அணைந்துவிடும் வகையில் வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!