எரிபொருள் லாரி கவிழ்ந்த விபத்து.. பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு..!


தான்சானியாவில் எரிபொருள் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வடைந்து உள்ளது.

தான்சானியா நாட்டில் டொடோமா நகருக்கு 160 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது மொரகரோ நகர். இந்த பகுதியில் எரிபொருள் ஏற்றி சென்ற லாரி ஒன்று திடீரென சாலையில் கவிழ்ந்தது. அதில் இருந்த எரிபொருள் தரையில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியுள்ளது.

இதனால் அந்த பகுதியில் வசித்து வந்தோர் அவற்றை சேகரிக்க முயற்சித்து உள்ளனர். எரிபொருள் லாரி தீப்பிடித்து பற்றி எரிய தொடங்கியுள்ளது. ஆனால் இதனை கவனிக்காத பலர் தீயில் சிக்கினர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து அதிபர் ஜான் 3 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். இந்த சம்பவத்தில் கடந்த சனிக்கிழமை வரை 94 பேர் பலியாகி உள்ளனர். சிகிச்சை பெற்ற மற்றொரு நபர் நேற்று உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வடைந்து உள்ளது.

தொடர்ந்து 20 பேர் முஹிம்பிலி தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!