அத்திவரதர் தரிசனத்தில் வசூலான காணிக்கை பணம் எவ்வளவு தெரியுமா..?


காஞ்சிபுரத்தில், அத்தி வரதர் வைபவம் நடைபெற்ற தினத்தில் எத்தனை பக்தர்கள் தரிசனம் செய்தனர்? எவ்வளவு காணிக்கை வசூலிக்கப்பட்டது? என்ற தகவலை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் ஜூலை 1ம் தேதி அத்தி வரதர் வைபவம் துவங்கியது. 40 ஆண்டுகளுக்கு பிறகு அனந்தசரஸ் திருக்குளத்தில் இருந்து வெளிப்பட்ட அத்திவரதர், ஜூலை 1 ஆம் தேதி முதல் 24 நாட்கள் சயன கோலத்திலும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் நின்ற கோலத்தில் அருள் பாலித்தார்.

அத்தி வரதர் வைபவம் மொத்தம் 48 நாட்கள் நடைபெற்று, ஆகஸ்ட் 17ம் தேதி, சனிக்கிழமையான இன்று நிறைவு பெறுகிறது. மீண்டும் அத்திவரதர் அனந்தசரஸ் குளத்திற்குள் பள்ளி கொள்ள செல்கிறார்.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பெருமாள் பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்து பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அத்தி வரதரை தரிசனம் செய்தனர்.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா இன்று நிருபர்களிடம் கூறுகையில், அத்தி வரதர் வைபவம் சிறப்பாக நடைபெற உதவிய காவல் துறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் எனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மொத்தம் 1 கோடியே 7,500 பேர் இதுவரை அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர். இதுவரை எண்ணப்பட்ட பட்ட அளவில், ரூ.7 கோடி அளவிற்கு காணிக்கை வசூலாகியுள்ளது.

பக்தர்களின் வருகை காரணமாக, காஞ்சிபுரம் நகரில் குப்பைகள் அதிகம் சேர்வது வழக்கமாக இருந்தது தினமும் சுமார் 25 டன் அளவு குப்பையை அகற்றும் பணி நடைபெற்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!