கழுத்தில் மாலை அணிந்து கொண்டு அத்திவரதரை தரிசித்த விக்கி – நயன் ஜோடி..!


லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா அத்திவரதரை தரிசித்துள்ள சம்பவமானது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அத்திவரதர் கோவிலில் நாளுக்கு நாள் கூட்டம் லட்சக்கணக்கில் அதிகரித்து கொண்டே போகிறது. அத்தி வரதர் தரிசனம் முடிவடைவதற்கு இன்னும் 2 நாட்களேயுள்ளது.

மக்கள் கூட்டம் ஆரவாரத்துடன் அத்திவரதர் கோவிலுக்கு திரண்டு வருகின்றனர். நேற்று கிட்டத்தட்ட 5 லட்சம் மக்கள் அத்திவரதரை தரசிப்பதற்கு வந்தனர்.

சில முக்கிய பிரபலங்களும் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நள்ளிரவில் அத்திவரதரை தரிசித்தார்.

அவ்வழியில், கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அன்புடன் அழைக்கப்படும் நயன்தாரா தன் கணவன் விக்னேஷ் சிவனுடன் அத்திவரதரை தரிசிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கணவன் மனைவி இருவரும் கழுத்தில் மாலை அணிந்து கொண்டு கோவிலில் இருந்து வெளியே வரும் போது வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவமானது சிறிது நேரம் அத்திவரதர் கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.-Source: times.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!