காஷ்மீர் பாதுகாப்பு பணியில் சிறப்பாக பங்காற்றிய 2 பெண் அதிகாரிகள்.. குவியும் பாராட்டுக்கள்..!


காஷ்மீர் பகுதியில் சவாலான நேரத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளான அஸ்கர், நித்யா ஆகியோருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கு 4 நாட்களுக்கு முன்பு ஸ்ரீநகரில் தகவல் தொடர்பு இயக்குனராக பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சயித் செஹ்ரிஸ் அஸ்கர் நியமிக்கப்பட்டார்.

டாக்டராக இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், ஸ்ரீநகரை சேர்ந்தவர்கள் தொலைதூரத்தில் உள்ள தங்களது உறவினர்களுடன் பொது தொலைபேசிகள் மூலம் தொடர்பு கொள்ள உதவி செய்துள்ளார். தொலைபேசி, இணையதள சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், அஸ்கர் செய்த உதவி பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது.

இதேபோல், சண்டிகரை சேர்ந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான நித்யா ஸ்ரீநகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். தால் ஏரி, கவர்னர் மாளிகை, முக்கிய தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த இடங்களின் பாதுகாப்பை இவர் கையாண்டார். சவாலான நேரத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளான அஸ்கர், நித்யா ஆகியோருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!