யூடியூப்பில் பணம் சம்பாதிக்க விபரீத செயல்… ரயில் தண்டவாளத்தில் சிலிண்டர்..!


யூடியூப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்பட சமூக வலைதளங்களில் மக்களை கவர்ந்து பணம் சம்பாதிக்க திரில்லா விஷயங்களை போடுகிறார். அப்படித்தான் ஆந்திராவில் தண்டவாளத்தில் சிலிண்டரை வைத்து ரயில் மோதியதை வீடியோ எடுத்து வாலிபர் வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திராவின் ஏர்பேடு அடுத்த சென்னூறு கிராமத்தை சேர்ந்த ராமிரெட்டி. இவர் ஹைதராபாத்தில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவர் தனது யூடியூப் சேனலில் ‘திரில்’ வீடியோக்களை வெளியிட்டு பணம் சம்பாதிக்க விபரீத வீடியோக்களை எடுத்து வெளியிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில்.ஆந்திராவில் சமீபகாலமாக ரயில் தண்டவாளம் முன்பு காஸ் சிலிண்டர், பட்டாசு, பைக், சைக்கிள் போன்றவற்றை வைத்து அதன் மீது ரயில் மோதுவதை வீடியோவாக எடுத்து வெளியிட்டு வருகிறார்கள். பின்னர் அந்த வீடியோ காட்சிகளை சமூக வலைத்தளத்தில் வைராகி வந்துள்ளது. இந்த காரியத்தை செய்து வந்தது ராமிரெட்டி தான் என்பதை அறிந்த ரயில்வே போலீசார் அவரை கைது செய்தனர்.

ராமி ரெட்டி கடந்த ஜூன் 14ம் தேதி முதல் ஜூலை 27ம் தேதி வரை 47 வீடியோக்களை யூ டியூப்பில் பதிவிட்டுள்ளார். குறிப்பாக ரயில் தண்டவாளத்தில் சைக்கிள் செயின்கள், காஸ் சிலிண்டர், பைக் போன்றவற்றை வைத்துவிட்டு, விபரீதத்தை உணராமல் ரயில் மோதும் காட்சியை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். யூடியூப்பில் பார்வையாளர்கள் அதிகரித்து பணம் சம்பாதிக்க இந்த செயலை ராமிரெட்டி செய்தததாக விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்..

இது குறித்து ரேணிகுண்டா ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “ரயில் வேகமாக இடிக்கும்போது சிலிண்டர் வெடித்திருந்தால் பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும். ஆபத்தை உணராமல் பணம் சம்பாதிக்க இதுபோன்ற தவறான செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது. இனி இவ்வாறு யாராவது செய்தால் கடுமையான நடவடிக்கை எடுப்போம்” என எச்சரித்தார்கள்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!