மேலை நாட்டு பானங்களின் வடிவில் இளநீர்.. கதறும் கார்பரேட்டுகள்..!!

மக்களை கவர மேலை நாட்டு பானங்களை போல வடிவொத்த இளநீர் தற்போது சந்தைக்கு வர ஆரம்பித்து விட்டது.

கோக கோல மற்றும் பெப்சி இரண்டையும் நிறுத்த வேண்டும் என்று ஒரு பலமான எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

கேரளா பிளாசிமடா தமிழகத்தில் செங்கல்பட்டு அருகே உள்ள மாமண்டூர் பாலாற்று தண்ணீரை உறுஞ்சியது பெப்சி.

இதை போல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோக் கம்பெனி ஆரணி ஆற்றை ஒன்றும் இல்லாமல் ஆக்க பார்க்கிறது.

இப்படி நம் மண்ணில் ஆதார சுருதியாக உள்ள நீரை உறிஞ்சி விவசாயம் இப்போது இல்லை.

எப்போது தங்க முட்டை இடும் வாத்தை ரியல் எஸ்டேட் என்னும் அரக்கன் இடம் கொடுத்தோமோ அன்றே நம் மண்ணின் ஆதார சுருதியான விவசாயம் அழிவை நோக்கி செலுத்த ஆரம்பித்து விட்டோம்.

ஒருவழியாக ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்பு தான் காலாச்சார முறைகளின் குறித்த தாக்கம் மக்களிடையே விதையூன்றியது.

சிறிது காலம் தொடர்ந்த அந்த தாக்கம் திடீரென்று சரிய தொடங்கி விட்டது. இந்த நிலையில் மீண்டும் அது குறித்த விழிப்புணர்வு மீண்டு எழ ஆரம்பித்து விட்டது. நம் மண்ணில் எத்தனையோ தரமான தயாரிப்புகள் உள்ளனநம் மண்ணின் ஆதார சுருதியான விவசாயத்தை சார்ந்த மோர் இளநீர் நுங்கு போன்றவைகள்.


தகிக்கும் வெயிலில் ஏற்படும் தாகத்தைத் தணிக்க, இளநீருக்கு மிஞ்சியது எதுவுமில்லை. பழரசங்கள் தொண்டைக்கு இதமாக இருந்தாலும், சிரமமின்றி, செலவின்றி மிகவும் தூய்மையாகக் கிடைக்கக் கூடியது இளநீரே.

கோடை காலத்தில் இதைத் தேடிப் போக வேண்டிய அவசியமில்லாமல், எல்லா ஊர்களிலும் ஆங்காங்கே சாலையோரங்களில் குவிக்கப்பட்டு விற்கப்படுகின்றன.

இயற்கை தந்துள்ள வரப்பிரசாதமான இளநீர், ஒரு முழுமையான சத்துள்ள நீராகும். தேங்காய் என்பது பழமெனவும் கருதப்படுகிறது.

பழங்களில் நடுவே உள்ள ‘எண்டோஸ்பெர்ம்’ என்ற பகுதியே, பழம் பெரிதாகி சதைப் பற்றுடன் உருவாகக் காரணம்.

இந்த ‘எண்டோஸ் பெர்ம்’ தேங்காயில் திரவ வடிவில் உள்ளது. வெப்பம் அதிகமாக உள்ள இடங்களிலும், கடற்கரை பகுதிகளிலும் பெரிதளவில் வளரும் தென்னை மரங்கள்,ஆயுர்வேத மருத்துவ சாஸ்திரத்தின்படி இளநீர், உடலின் முக்கிய செயல்கள் பலவற்றை எளிதாக்க மிகவும் உதவும் ஒரு மருந்து.

ஆனால், இன்றைய இளைய தலைமுறை இதனை குடிப்பதை கௌரவ குறைச்சல் என்று நினைக்க காரணம் அயல் நாட்டு நிறுவனங்கள் செய்த மூளை மழுங்கடிக்கும் விளையாட்டு சினிமா கலைஞர்களின் ஆடம்பர விளம்பரம் தவிர வேறு எதுவும் இல்லை.

இவர்களுக்கு தேவை கோடிக்கணக்கான பணம் மட்டுமே இதனால் ஏற்படும் பாதகம் பற்றி இவர்களுக்கு என்ன கவலை.

இளநீர் விற்கும் சாலையோர வியாபாரி இடம் நாம் கொடுக்கும் பணம் அவன் வீட்டில் அடுப்பெரிய உதவியாக இருக்கும்நான் அந்நிய பொருள்களை முழுவதும் ஆகா புறக்கணியுங்கள் என்று சொல்ல வில்லை.

ஆனால் அந்த பொருள்களை நாம் பயன் படுத்துவதால் நம் இந்திய மண்ணிற்கு வருங்கால இயற்கைக்கு நாம் எவ்வளவு பெரும் தீமை செய்கிறோம் என்று மட்டும் நினைத்து பாருங்கள்.-Source: seithipunal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!