பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வனிதா… அதிர்ச்சியில் ஹவுஸ் மேட்ஸ்கள்..!


பிக் பாஸ் சீசன் 3யின் 50வது நாளுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் மூன்றாவது சீசன் 50 -வது நாளை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதிலிருந்து பாத்திமா பாபு, வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன் மற்றும் சாக்ஷி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மீதமிருக்கும் 9 போட்டியாளர்களுடன் 10-வது நபராக நடிகை கஸ்தூரி இணைந்திருக்கிறார். இந்த நிலையில் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஹவுஸ் மேட்ஸ்க்கு இன்று ஓட்டல் டாஸ்க் கொடுக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது. அந்த ஓட்டலுக்கு வனிதா சிறப்பு விருந்தாளியாக வருகிறார்.

அவரை கண்ட சக ஹவுஸ் மேட்ஸ் மீண்டும் இவர் வந்து விட்டாரா? என்று அதிர்ச்சியடைந்துள்ளனர். அனேகமாக இன்று ஒருநாள் மட்டுமே வனிதா பிக்பாஸ் வீட்டில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வனிதாவிடம் ஏற்கனவே மோதிய மதுமிதா மற்றும் அபிராமி வீட்டில் இருப்பதால் அவர்கள் இருவருக்கும் மீண்டும் வனிதா சிக்கலைக் கொடுப்பாரா? அல்லது கஸ்தூரியை டார்கெட் செய்வாரா? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.-Source: top.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!