பாறைகளுக்கு நடுவே சிக்கிய வாலிபர் 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு..!


கம்போடியாவில் பாறைகளுக்கு நடுவே சிக்கிய வாலிபர் 4 நாட்களுக்கு பின் மீட்கப்பட்டார்.

தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் வவ்வால்களின் கழிவு உரமாக பயன்படுத்தப்படுகிறது.

வடமேற்கு மாகாணமான பட்டம்பாங்கை சேர்ந்த சம் போரா (வயது 28), என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வவ்வால்களின் கழிவை சேகரிப்பதற்காக அங்குள்ள குகைப்பகுதிக்கு சென்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக 2 பாறைகளுக்கு நடுவே அவர் சிக்கிக்கொண் டார். அவர் அதில் இருந்து வெளியேறுவதற்கு கடுமையாக முயற்சித்தார். ஆனால் அவரால் சற்று நகர கூட முடியவில்லை. அவர் 4 நாட்கள் உணவு, தண்ணீர் எதுவும் இன்றி பாறைகளுக்கு நடுவே சிக்கி தவித்தார்.

இதற்கிடையே சம் போராவை அவரது குடும்பத்தினர் தேடியபோது தான், அவர் பாறைகளின் நடுவே சிக்கியிருப்பது தெரியவந்தது. அவரது குடும்பத்தினர் அளித்த தகவலின் பேரில் 200-க்கும் மேற்பட்ட மீட்பு குழுவினர் அங்கு விரைந்து சம் போராவை மீட்கும் முயற்சியில் இறங்கினர். 10 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அவர் மீட்கப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து சம் போரா கூறுகையில், “பாறைகளின் நடுவே சிக்கிய முதல் நாளே நான் உயிருடன் இருப்பேன் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டேன். என்னிடம் கத்தி இருந்திருந்தால், அப்போதே கழுத்தை அறுத்து தற்கொலை செய்திருப்பேன்” என கூறினார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!