அத்திவரதரை தரிசிக்க சென்று கணவன் – குழந்தையை பறி கொடுத்த மனைவி..!


தர்மபுரியில் நல்லது நடக்க வேண்டி அத்திவரதரை தரிசிக்க சென்றவர்களுக்கு நேர்ந்த கோர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. 40 நாள்கள் நடைபெறும் இவ்விழாவானது ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கியது. முதல் 30 நாட்கள் சயனக் கோலத்தில் காட்சி அளித்த அத்திவரதர் தற்பொழுது நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

சயன கோலத்தில் காட்சியளிக்கும் போது வந்த பக்தர்கள் கூட்டத்தை விட, தற்போது நின்ற கோலத்தில் அத்திவரதரை காண மிகுந்த ஆர்வம் கொண்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டம் திரண்டு வருகின்றனர்.

இந்த ஆர்வம் திருப்பூர் மாவட்டம் சிறுபூலபட்டியை சேர்ந்த சுப்புராஜ் என்பவரது குடும்பத்திற்கும் வந்தது. இதையடுத்து சுப்புராஜ் தனது மனைவி குழந்தை மற்றும் அவரது நெருங்கிய நண்பரின் மனைவி குழந்தைகளோடு சொகுசு கார் ஒன்றில் காஞ்சிபுரம் நோக்கி புறப்பட்டார்.

இந்நிலையில் தர்மபுரியை அடுத்த தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதி பள்ளத்தில் இருமுறை சுழன்று தலைகீழாக கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் சுப்புராஜ் மற்றும் அவரது மகன் விவன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மீதமுள்ள நபர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சிறு காயங்களுடன் தப்பிய சுப்புராஜின் மனைவி சிகிச்சை முடிந்த பின்பு தனது கணவன் மற்றும் குழந்தை பின் சடலத்தை கண்டு கதறி அழுதார். இச்சம்பவம் அங்கிருந்தோர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.-Source: times.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!