ரஜினி சாரை பார்க்கணும்…. அவர்கிட்ட கூட்டிட்டு போங்க.. விஜயலட்சுமி உருக்கமான வேண்டுகோள்..!


ரஜினி தனக்கு உதவ வேண்டும் என்று நடிகை விஜயலட்சுமி கேட்டு கொண்டுள்ளார். “ஒவ்வொரு நிமிஷமும் செத்துட்டு இருக்கேன்.. எல்லாரும் என்னை கைவிட்டுட்டாங்க.. என்னை எப்படியாவது ரஜினி சாருக்கு கூட்டிட்டு போங்க.. அவரைதான் நம்பி இருக்கேன்” என்று பிரண்ட்ஸ் பட ஹீரோயின் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

நடிகை விஜயலட்சுமி, ப்ரண்ட் படத்துக்கு பிறகு ஒருசில படங்கள் தமிழில் நடித்தார். கடைசி யாக ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் ஆர்யாவுக்கு அண்ணியாக நடித்திருந்தார். தொடர்ந்து டிவி தொடர்களிலும் தலைகாட்டி வந்தார்.

பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், உடல்நலக் குறைவால் அவதிப்பட்டார். உயர் ரத்த அழுத்தம் பெரும் தொல்லையாக இவருக்கு இருந்தது. இதனால் பெங்களூருவில் சிகிச்சை எடுத்து கொண்டார்.

அந்த சமயத்தில், விஜயலட்சுமிக்கு திரையுலகினர் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று அவரது சகோதரி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி திரைப்பிரபலங்கள் சிலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்திருந்தனர்.

இந்நிலையில், தனது தாயாருக்கும், குடும்பத்துக்கும் உதவ வேண்டும் என்று விஜயலட்சுமியே வேண்டுகோள் விடுத்துள்ளார். இது சம்பந்தமாக பேசி ஒரு வீடியோவும் வெளியிட்டுள்ளார். அதில், நான் ஒவ்வொரு நிமிஷமும் நரகத்தில் இருக்கிறேன், நான் அழிஞ்சு போகணும்னு நிறைய பேர் நினைக்கிறாங்க.

என் குடும்பம் இப்போ சொல்ல முடியாத கஷ்டத்துல இருக்கு. இதை ரஜினி சாரால் மட்டுமே சரி செய்ய முடியும். ஆனா, என்னை யாரும் அவர்கிட்ட கூட்டிட்டு போக மாட்டேங்கறாங்க. அதனாலதான் இந்த வீடியோ வெளியிடறேன். இதை அவருக்கிட்ட எப்படியாவது ரீச் பண்ண வெச்சிடுங்க. அவரால மட்டுமே எனக்கு உதவ முடியும்” என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே இதற்கு முன்பு, அவரது சகோதரி உதவி கோரியிருந்தபோது, “யாருமே உதவி கேட்டும் கன்னட நடிகர்கள் சிலர் உதவி செய்யவில்லை” என்று விஜயலட்சுமி குற்றம்சாட்டி வீடியோவே போட்டிருந்தார். இதற்கு கன்னட நடிகர் சிவராஜ்குமார் பதில் அளித்திருந்தார்.

அதில், “விஜலட்சுமிக்கு தொடர்ந்து உதவி செய்துட்டே இருக்க முடியாது. கை, கால் எல்லாம் நல்லாதானே இருக்கு.. உடலில் குறை இருக்கிற மனுஷங்களே கடினமாக உழைச்சு வாழும்போது, நல்லா இருக்கும் அவர் ஏன் தன்னை கவனித்து கொள்ள முடியாது? ஒருத்தருக்கு உதவி செய்யணும்னா அந்த எண்ணம் முதலில் நமக்கு உள்ளே இருந்து வரணும்” என்று கூறியிருந்தது தற்போது நினைவுகூரத்தக்கது.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!