10 கோடி பயனாளர்களின் கிரடிட் கார்டு விவரங்களை திருடிய சாஃப்ட்வேர் என்ஜினீயர்..!


அமெரிக்காவில் 10 கோடி பயனாளர்களின் கிரடிட் கார்டு தொடர்பான விவரங்களை திருடிய பெண் சாஃப்ட்வேர் என்ஜினீயர் பெருமை அடித்ததால் போலீசாரிடம் சிக்கிக் கொண்டார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தை சேர்ந்தவர் பெண் சாஃப்ட்வேர் என்ஜினீயர் பெய்ஜ் தாம்சன் (33). இவர் தனது கணினி திறமையை பயன்படுத்தி, கேபிடல் ஒன் வங்கியின் வாடிக்கையாளர்களான சுமார் 10 கோடி பேரின் கிரடிட் கார்டு தொடர்பான விவரங்களை திருடியுள்ளார்.

இதுகுறித்து சமூகவலைத்தளத்திலும், கிட் கியூப் ( GitHub) என்ற இணையதளத்திலும் தற்பெருமை அடித்துள்ளார். இதை கவனித்த இணையதள பயனாளர் ஒருவர், கேபிடல் ஒன் வங்கிக்கு தகவல் அளித்துள்ளார். வங்கியும் கிரடிட் கார்டு விவரங்கள் திருடப்பட்டதை அறிந்து புகார் அளித்துள்ளது.

இதன் அடிப்படையில் தகவல் திருட்டில் ஈடுபட்ட பெய்ஜ் தாம்சனை கைது செய்த எப்பிஐ அதிகாரிகள், திருடி வைத்திருந்த விவரங்களையும் மீட்டுள்ளனர். கிரடிட் கார்டு கணக்கு விவரங்களையோ அதற்கான பாஸ்வேர்டுகளையோ பெய்ஜ் தாம்சன் திருடவில்லை.

திருடிய விவரங்களை பயன்படுத்தி நிதிமோசடியில் ஈடுபடவில்லை. இருப்பினும் தகவல் திருட்டுக்காக அவருக்கு 5 ஆண்டுவரை சிறைத் தண்டனையும், 2 லட்சத்து 50 ஆயிரம் டாலர் அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!