16 வயது சிறுவனுக்கு கோடிகளில் அடித்த ஜாக்பாட் – ஆன்லைன் வீடியோ கேம்

அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியைச் சேர்ந்தவர் கியர்ஸ்ட்ரோ(16). இவர் அமெரிக்காவில் நடைப்பெற்ற போர்ட்நைட் ஆன்லைன் வீடியோ கேம் போட்டியில் கலந்துக் கொண்டார்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே கியர்ஸ்ட்ரோ அசத்தலாக விளையாடி வந்துள்ளார். உலக அளவில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் பல்வேறு சுற்றுகளின் முடிவில் 59 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை கியர்ஸ்ட்ரோ பிடித்தார்.

இந்த போட்டியில் முதல் இடம் பிடிக்கும் நபருக்கு 3 மில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் ரூ.28 கோடியே 68 லட்சம்) என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுவரை ஆன்லைன் கேம் போட்டியில் இவ்வளவு பெரிய தொகை பரிசாக அறிவிக்கப்பட்டதில்லை. இதுவே முதன்முறையாகும். இதனால் கியர்ஸ்ட்ரோ இப்போது உலக அளவில் பிரபலமாகியுள்ளார்.

இந்த போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த சீன வீரர் 1.8 மில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் ரூ.12 கோடியே 39 லட்சம்) பரிசாக பெற்றார். மேலும் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு ரூ.50 ஆயிரம் டாலர் வழங்கப்பட்டது.

உலகிலேயே முதன்முறையாக ஆன்லைன் கேமிற்கு மொத்தமாக இவ்வளவு தொகை செலவிடப்பட்டது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.