பிரபல நடிகையின் மாமியார் மீது கொலை முயற்சி புகார் – தங்கையின் பேஸ்புக் பதிவால் பரபரப்பு


தன்னையும், தனது தாயாரையும் அக்காவின் மாமியார் கொல்ல முயன்றார் என்ற திடுக்கிடும் தகவலை வெளியிட்டு இருக்கிறார் நடிகை ஷில்பா.
தமிழில் மாப்பிள்ளை கவுண்டர், வேதம், மானஸ்தன், ஆதி-பகவன் உள்பட பல படங்களில் நடித்தவர் சாக்‌ஷி சிவானந்த். தவிர தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார். அவரது தங்கை ஷில்பா சிவானந்த். இவரும் நடிகைதான். தெலுங்கில் விஷ்ணு, கன்னடத்தில் சர்வபஹீமா மற்றும் சில இந்தி படங்களில் நடித்திருப்பதுடன், இந்தி டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருக்கும் அவர், தனது பெயரை ‘ஒஹன்னா ஷில்பா’ என்று மாற்றிக்கொண்டார். தன்னையும், தனது தாயாரையும் அக்காவின் மாமியார் கொல்ல முயன்றதாக, தனது பேஸ்புக்கில் பரபரப்பான புகார் கூறியுள்ளா ஷில்பா சிவானந்த். அவர் கூறியிருப்பதாவது:

‘சில மாதங்களுக்கு முன் எனது சகோதரியின் மாமியார் பாவனா பிரம்பாஹாட் மீது எனது அம்மா போலீசில் கொலை முயற்சி புகார் அளித்தார். அவர் இந்தியாவில் இருந்தபோது என்னையும், எனது தாயையும் கொல்ல முயன்றார் என்று புகாரில் குறிப்பிடப்பட்டது. மறுநாளே பாவனா அமெரிக்கா சென்றுவிட்டார். இதுதொடர்பாக மும்பை போலீசார் பலமுறை எனது அம்மாவை அழைத்து தகவல் கேட்டு வருகின்றனர். எப்போது இந்தியா வந்தாலும் கொலை முயற்சி வழக்கை நீங்கள் (பாவனா) எதிர்கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.-Source: dinakaran

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!