கழிவறையில் உணவு சமைக்கலாம் தப்பில்ல… சர்ச்சையை கிளப்பிய மத்திய பிரதேச மந்திரி


கழிவறையில் உணவு சமைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என மத்திய பிரதேச மந்திரி கூறியுள்ளார்.

மத்திய பிரதேசத்தின் கரேரா நகரில் அங்கன்வாடி மையம் ஒன்று உள்ளது. இங்குள்ள கழிவறையில் குழந்தைகளுக்கு வேண்டிய உணவு சமைக்கப்பட்டு உள்ளது என புகார் எழுந்தது.

சமையலறையுடன் கூடிய கழிவறையில் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் உணவு தயாரிப்பதற்கான அடுப்பு ஆகியவை உள்ளன. சமையல் செய்வதற்கு தேவையான உபகரணங்கள் கழிவறையில் வைக்கப்பட்டு உள்ளன.

இதுபற்றிய அறிக்கை வெளியான நிலையில், மத்திய பிரதேச மந்திரி இமர்த்தி தேவி கூறும்பொழுது, கழிவறை மற்றும் அடுப்பு ஆகிய இரண்டையும் பிரிக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. இன்றளவில் நமது வீடுகளில் கூட கழிவறையையும், குளியலறையையும் இணைந்த வகையில் அமைத்து உள்ளோம்.

இதனால் உறவினர்கள் நமது வீடுகளில் சாப்பிட மறுக்கிறார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். கழிவறையில் சமையல் உபகரணங்களை வைக்கலாம். இதுபற்றி விசாரணை நடத்தப்படும் என கூறியுள்ளார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!