சரவணபவன் அண்ணாச்சியின் சொத்துகள் யாருக்கு..? கிருத்திகாவும் உரிமை கோருவாரா..?


சரவண பவன் அண்ணாச்சி சேர்த்து வைத்துள்ள சொத்துகள் தற்போது யாருக்கு செல்லும் என்பது தான் பலருடைய கேள்விகளாக உள்ளன. அண்ணாச்சிக்கு முதல் மனைவி மூலம் 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் தான் தற்போது சரவண பவன் உணவக குழுமத்தை முழுக்க முழுக்க பார்த்துக் கொள்கின்றனர். சரவண பவன் உணவகம் கடல் கடந்து சென்றதில் இவர்களின் பங்கு மிக முக்கியமானது.

அந்த வகையில் அண்ணாச்சி ஏற்கனவே சரவண பவன் உணவகம் என்று வந்துவிட்டால் அது தனது முதல் மனைவி மூலமாக பிறந்த 2 மகன்களுக்கு என்று தீர்க்கமாக முடிவெடுத்துவிட்டார். மேலும் சரவண பவன் நிறுவனத்தின் பதிவில் தனக்கு பிறகு தனது மகன்களுக்கான பொறுப்புகளை அவர் தெளிவாக எடுத்து பதிவு செய்து வைத்துவிட்டார்.

எனவே சரவண பவன் உணவகத்தை நிர்வகிப்பதில் எந்த சிக்கலும் இல்லை என்கிறார்கள். அதேபோல் வங்கிக் கணக்குகளும் கூட பெரும்பாலும் சரவண பவன் நிறுவன பெயரிலேயே உள்ளன. இதனால் அதன் வரவு செலவு கணக்குகளையும் இரண்டு மகன்களும் இணைந்தே மேற்கொள்ள முடியும்.

ஆனால் பிரச்சனை என்ன என்றால் அண்ணாச்சி சம்பாதித்த பணத்தில் வாங்கிய சொத்துகள் தான். அதனை தற்போது வரை அவர் தனது மகன்களுக்கு பிரித்துக் கொடுக்கவில்லை என்கிறார்கள். இதே போல் 2வது மனைவி கிருத்திகாவுடன் கடைசி காலத்தில் அண்ணாச்சி சேர்ந்து வாழவில்லை. ஆனால் அவரை விவாகரத்தும் செய்யவில்லை என்கிறார்கள்.

எனவே 2வது மனைவி என்கிற வகையில் கிருத்திகா சொத்துகளுக்கு உரிமை கோர முடியும் என்கிறார்கள். மேலும் அண்ணாச்சி பெயரில் உள்ள நிலம், வீடு உள்ளிட்ட இதர சொத்துகளை கிருத்திகா உரிமை கோர வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள்.

இந்த விவகாரத்தில் நீதிமன்றம் சென்று கிருத்திகா தேவையில்லாமல் பிரச்சனை செய்துவிடக்கூடாது என்பதால் அண்ணாச்சியின் குடும்பத்திற்கு நெருக்கமான சில வழக்கறிஞர்கள் தற்போதே கிருத்திகாவுடன் செட்டில்மென்ட் பேசுவதாக சொல்கிறார்கள்.

அந்த வகையில் கணிசமான அளவில் பணம் மற்றும் சொத்துகள் கிருத்திகாவுக்கும் கிடைக்கும் என்கிறார்கள். தற்போதைய சூழலில் சரவண பவன் மதிப்பே 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில் அதே அளவிற்கு அண்ணாச்சிக்கு சொத்துகளும் இருக்கும் என்கிறார்கள்.-Source: times.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!