தொழிலதிபர் வீட்டுக் கல்யாணம்.. 320 டன் குப்பை – பாழானது நதி !


உத்தரகாண்ட் மாநிலத்தில் தொழிலதிபர் வீட்டுக் கல்யாணத்தில் 320 டன் அளவுக்குக் குப்பைகளை உருவாக்கி அதை அப்புறப்படுத்தவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தென் ஆப்பிரிக்காவில் தொழில் செய்து வரும் தொழிலதிபர்களான அஜய் குப்தா மற்றும் அதுல் குப்தா ஆகியோரின் இல்லத் திருமணங்கள்உத்தரகாண்ட் மாநிலம் கமோலி மாவட்டத்திலுள்ள ஆலி என்ற மலைப்பிரதேசத்தில் கடந்த மாதம் நடைபெற்றன. இந்த திருமணத்தில் பாஜக தலைவர்கள், சாமியார்கள் உள்ளிட்ட பெரும்புள்ளிகள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் இந்த திருமணத்தில் அதிகமாகக் குப்பைகள் உற்பத்தியானதாகவும் அதைத் திருமணவீட்டார் முறையாக அப்புறப்படுத்தவில்லை எனப் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இது சம்மந்தமாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஆய்வறிக்கைக் கேட்டது நீதிமன்றம்.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அளித்த அறிக்கையில் ‘இந்த திருமணத்தினால் 320 டன் குப்பைகள் உருவானதாகவும், ,மேலும் திருமணத்தில் உபச்சாரம் செய்ய வந்தவர்கள் அனைவரும் பொதுவெளியில் இயற்கை உபாதைகளைக் கழித்ததாகவும் அப்போது பெய்த மழையால் தாவுலி கங்கா நதி மாசடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதை கேட்ட நீதிமன்றம் அதைச் சரிசெய்ய எவ்வளவு செலவாகும் என்றும் அறிக்கையில் குறிப்பிடுமாறும் கூறியுள்ளனர்.அதற்கானத் தொகையைப் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பெற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.-Source: webdunia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!