உலகின் மிகப் பெரிய பணக்காரர் பட்டியலில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்ட பில்கேட்ஸ்

உலகில் அதிக சொத்து கொண்ட பணக்காரர் பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த பில்கேட்ஸை பிரான்சைச் சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

உலகின் பெரும்பணக்காரர்களின் பட்டியலை புளூம்பர்க் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அதில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த பில்கேட்ஸை அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் ஏற்கனவே பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார்.

இந்நிலையில் பிரான்சின் எல்விஎம்எச் (LVMH) நிறுவனத் தலைமைச் செயலதிகாரி பெர்னார்ட் அர்னால்ட் 2-ம் இடத்தில் இருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸைப் பின்னுக்குத் தள்ளியிருப்பதாக புளூம் பர்க் கூறியுள்ளது.

தற்போதும் ஜெஃப் பெசோஸ் 125 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் முதலிடத்திலும், 108 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் பெர்னார்ட் 2-ம் இடத்திலும், 107 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் பில்கேட்ஸ் 3-ம் இடத்திலும் உள்ளனர்.

பில்கேட்ஸ் தனது அறக்கட்டளைக்கு 35 பில்லியன் டாலரை நன்கொடையாக வழங்காவிட்டால் அவரே முதலிடத்தில் நீடித்திருப்பார் என புளூம்பர்க் சுட்டிக்காட்டியுள்ளது.- Source: dailythanthi


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.