மீரா மிதுன் ஒரு பிராடு.! என் வாய்ப்பை பறித்தவ – ஷாலு ஷம்மு அதிர்ச்சி பேட்டி.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொள்ள இதுவரை இருவர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இவர்களில் 16-வது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவர் மீரா மிதுன். எதற்கெடுத்தாலும் கண்ணில் தண்ணீர் விட்டு ட்ராமா போட்டு வருகிறார்.

மீரா மிதுனுக்கு பதிலாக உள்ளே செல்ல இருந்தவர் தான் ஷாலு ஷம்முவாம். இது பற்றி ஷாலுவே பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பேட்டியில் என் வாய்ப்பை தட்டி பறித்தவ மீரா தான். நான் தான் பிக் பாஸில் செல்ல தேர்வாகி இருந்தேன். இறுதியில் மீரா வந்து எல்லாவற்றையும் கெடுத்து விட்டார்.

அவரை பற்றி பல்வேறு சர்ச்சைகள் சுற்றி திரிவதால் அவரை தேர்வு செய்து விட்டார்கள். அவ ஒரு பிராடு என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பிக் பாஸ் தொடங்குவதற்கு முன்பே ஷாலு சம்மு பிக் பாஸ் போட்டியாளராக எனக்கு தகுதி இல்லையாம் என கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.- Source: kalakkalcinema


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.