எஸ்ஆர்எம் பல்கலை வளாகத்தில் மாணவன் தற்கொலை… தொடரும் மர்ம மரணம்..!


காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலை வளாகத்தில் மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் கடந்த சில மாதங்களாக, மர்ம மரணங்கள் நிகழ்ந்து வருகின்றன. இங்கு இந்தியா முழுவதிலும் இருந்து வரும் மாணவர்கள் படிக்கின்றனர்.

இந்நிலையில், இன்று (ஜூலை 15), கன்னியாகுமரியை சேர்ந்த ராகவன் என்ற மாணவன், திடீரென பல்கலைக்கழகத்தின் 15வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளான்.

ஐடி பிரிவில் 4வது ஆண்டு படித்து வந்த ராகவன், தனது சகோதரன் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து பல்கலைக்கழகம் அருகிலேயே தனியாக அறை எடுத்து தங்கியிருந்துள்ளான்.
இந்நிலையில், அவனது மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுதது போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதல்கட்டமாக, ”allam and thattu” என்று எழுதி ராகவன் கையெழுத்திட்ட ஒரு கடிதம் போலீசாரிடம் சிக்கியுள்ளது.

இதன் அர்த்தம் என்ன என்பதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.-Source: times.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!