13 வயதான மாணவனுடன் பாலியல் உறவு.. 20 வயது ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..!


13 வய­தான தனது மாண­வ­னுடன் பாலியல் உறவில் ஈடு­பட்ட முன்னாள் ஆசி­ரி­யை­யான யுவ­தி­யொ­ரு­வ­ருக்கு அமெ­ரிக்க நீதி­மன்றம் 20 வருட சிறைத்­தண்­டனை விதித்­துள்­ளது.

அரி­ஸோனா மாநி­லத்தைச் சேர்ந்த பிரிட்­டனி ஸிமோரா எனும் 20 வய­தான யுவ­திக்கே இத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.பிரிட்­டனி ஸிமோரா அரி­ஸோனா மாநி­லத்தின் பாட­சா­லை­யொன்றில் ஆசி­ரி­யை­யாக பணி­யாற்­றி­யவர்.

இதன்­போது தனது மாண­வர்­களில் ஒரு­வ­னான 13 வயது சிறு­வ­னுடன் பல தட­வைகள் பாலியல் உறவில் ஈடு­பட்­ட­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டது.

திரு­ம­ண­மான பிரிட்­டனி ஸிமோ­ரா­வுக்கும் தமது மக­னுக்கும் இடையில் தகாத தொடர்பு இருப்­பதை மேற்­படி மாண­வனின் தொலை­பே­சியை ஆராய்ந்­ததன் மூலம் அவனின் பெற்றோர் கண்­டு­பி­டித்­தனர்.

இது தொடர்­பாக விசா­ரணை நடத்­திய பொலிஸார் கடந்த வருடம் மார்ச் மாதம் பிரிட்­டனி ஸிமோ­ராவை கைது செய்­தனர்.அதன் பின் அவர் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்டார்.

இது தொடர்­பாக நீதி­மன்றில் நடை­பெற்ற வழக்கு விசா­ர­ணை­யின்­போது தன் மீதான குற்­றச்­சாட்­டு­களை பிரிட்­டனி ஸிமோரா ஒப்­புக்­கொண்­ட­துடன், தனது நட­வ­டிக்­கைக்­காக மன்­னிப்புக் கோரு­வ­தா­கவும் தெரி­வித்தார்.

இந்நிலையில், அவருக்கு 20 வருட சிறைத்தண்டனை விதித்து கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.-Source: lankasee

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!