வெடித்துச் சிதறிய செல்போன்! பேசிக் கொண்டே பைக்கில் சென்ற இளைஞருக்கு நேர்ந்த பயங்கரம்!


இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து அதனுள் செல்போனை வைத்து பேசிக் கொண்டு சென்றபோது செல்போன் வெடித்து இளைஞருக்கு இடது புற காதில் பலத்த காயம் ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த புலியூடரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார் . நேற்று விடுமுறை நாள் என்பதால் தனது இரு சக்கர வாகனத்தில் ஓசூரில் இருந்து தனது சொந்த ஊரான புலியூருக்கு சென்றுள்ளார்.

செல்லும் வழியில் தனது செல்போன் அழைப்பு வந்ததால் செல்போனை எடுத்து தனது ஹெல்மெட்டுக்குள் வைத்து பேசியபடி சென்றுள்ளார். சிறிது நேரம் பேசிக்கொண்டே சென்றபோது அப்போது திடீரென அவரது செல்போன் அதிக சூடாகி வெடித்தது இந்நிலையில் நிலை தடுமாறி ஆறுமுகம் கீழே விழுந்துள்ளார்.
இந்நிலையில் அக்கம்பக்கத்தினர் உடனே வந்து அவரை காப்பாற்றி முதலுதவி அளித்து அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்நிலையில் செல்போன் வெடித்ததில் அவரது இடது புற காதில் பலமாக அடிபட்டிருந்தது இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வாகனத்தில் செல்லும் போது செல்போன் பேசக்கூடாது என அரசு பலமுறை அறிவித்துள்ளது அதனை தெளிவுபடுத்தும் வகையில் பல்வேறு பகுதிகளில் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் வைத்துள்ளனர்.இதையும் தாண்டி பல இளைஞர்கள் வாகனத்தில் செல்லும் போது செல்போன் பேசியபடி தான் சென்று வருகின்றனர். அவ்வாறு செய்தால் இந்த மாதிரியான விபத்துகள்தான் ஏற்படும்.-Source: times.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!