சாக்ஷி யாரா நாமினேட் பண்ணிருக்காங்க தெரிஞ்சா ஷாக் ஆய்டுவீங்க…!


பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து மூன்று வாரங்களைக் கடந்துள்ளது. சண்டைக்கும் சச்சரவுக்கும் பஞ்சம் இல்லாத இந்த சீசன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நேற்றைய போட்டியிலிருந்து ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் வனிதா வெளியேறினார்.

அதைத்தொடர்ந்து இந்த வாரத்திற்கான நாமினேஷன் தொடங்கியுள்ளது. அதற்கான புரோமோ வெளியாகியுள்ளது. அதில், முதல் ஆளாக உள்ளே சென்ற லாஸ்லியா மீராவை நாமினேட் செய்ய அவரை தொடர்ந்து மோகன் வைத்யா மற்றும் சரவணன் இருவரும் மாற்றி மாற்றி நாமினேட் செய்து கொண்டனர். பின்பு வழக்கம் போல் மீராவை, தர்ஷன், சேரன் மற்றும் ஷெரின் ஆகியோர் நாமினேட் செய்துள்ளனர்.

இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க, சாக்ஷி நாமினேட் செய்தது யாரு’னு கேட்டா ஷாக் ஆய்டுவீங்க? ஆம்.. இந்த முறையை புதிதாக அவருடைய உயர் தோழி அபிராமியை நாமினேட் செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்களுக்குச் ‘சாக்ஷி தலைவரான தலைக்கனத்தில் தான் இப்படி ஆடுகிறார்’ என்று கூறுகின்றனர். மற்றொரு பக்கம் ‘கூடவே இருந்த தோழிக்கு எப்படி தான் இப்படி நம்பிக்கை துரோகம் செய்ய தோணுதோ? என்று கடுமையாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் இந்த புரோமோ வெளியான சில நிமிடங்கள் கழித்து விஜய் தொலைக்காட்சி அதை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.-Source: top.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!