டாய்லெட்டில் 116 மணி நேரம் அமர்ந்து சாதனை… எங்கு தெரியுமா..?


உலக சாதனை படைக்கும் முயற்சியில் பெல்ஜியத்தை சேர்ந்த நபர், ஐந்து நாட்கள் கழிப்பறையில் அமர்ந்திருந்தார்.

பஸ் டிரைவராக இருக்க விரும்பிய, 48 வயதான ஜிம்மி டி ஃப்ரென்னே, 165 மணிநேரம் கழிப்பறையில் உட்காருவது என்ற சவாலை ஏற்றார். ஆனால் வெள்ளிக்கிழமை காலையில் எழுந்து விட்டார். இதனால், 116 மணி நேரத்தில் சாதனை முயற்சி முடிந்தது.

இதுகுறித்து பேசிய ஜிம்மி டி ஃப்ரென்னே, மற்றவர்களை விட, தன்னை தானே கேலி செய்வது மிகச் சிறந்த நகைச்சுவை என்றார். மேலும், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஐந்து நிமிடங்கள் ஓய்வு எடுத்துக் கொண்டேன். நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது என்பது எளிதானது அல்ல.

நான் மிகவும் சோர்வாக இருந்தேன், என் கால்கள் வீங்கி விட்டன , ஆனால் நான் சாதனை செய்வேன் என்று நம்பினேன். இந்த சாதனையை அதிகாரப்பூர்வமாக்க முயற்சித்து வருகிறேன் என்றும் கூறினார்.

கின்னஸ் உலக சாதனையில் இதுவரை அதிகாரப்பூர்வமாக கழிப்பறையில் உட்கார்ந்து சாதனை படைத்தது குறித்து எந்த தகவலும் இல்லை. ஆனால், எனக்கு முன்பாக, ஒருவர் 100 மணி நேரத்திற்கு மேல் கழிப்பறையில் அமர்ந்திருந்ததை கேள்விப்பட்டு இருக்கிறேன். இந்த வித்தியாசமான முயற்சி பலரிடையே வரவேற்பை பெற்றுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!