பிரபல நடிகர் திடீர் மாரடைப்பால் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்..!


பிரபல தெலுங்கு நடிகர் அமித் புரோஹித். இவர் நடிப்பில் ‘சம்மோகனம்’ என்ற தெலுங்கு படம் கடந்த ஆண்டு திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது.

இந்த படத்தில் கதாநாயகியாக வந்த அதிதிராவின் முன்னாள் காதலர் கதாபாத்திரத்தில் அமித் புரோஹித் நடித்து இருந்தார். செவன் நைட்ஸ், ஆலாப் உள்ளிட்ட மேலும் பல படங்களில் நடித்துள்ளார்.

ஐதராபாத்தில் வசித்து வந்த அமித் புரோஹித்துக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 35. இளம் வயதில் அமித் புரோஹித் மரணம் அடைந்தது தெலுங்கு பட உலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

நடிகை அதிதிராவ் தனது டுவிட்டர் பக்கத்தில், “அமித் புரோஹித் அன்பானவர். கடினமான உழைப்பாளி. இந்த இளம் வயதில் அவர் மறைந்தது அதிர்ச்சி அளிக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று கூறியுள்ளார்.

நடிகர் சுதிர்பாபு கூறும்போது “அமித் புரோஹித் மரண செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர் நட்பாக பழக கூடியவர். ஒவ்வொரு காட்சியிலும் கஷ்டப்பட்டு நடிப்பார். இளம் வயதில் நம்மை விட்டு சென்றுவிட்டார்” என்று கூறியுள்ளார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!