மகளுக்கு பேஷா திருமணம் செய்த சுதா ரகுநாதன்… விளாசிய நெட்டிசன்கள்..!


பிரபல பாடகி சுதா ரகுநாதன் தனது மகள் மாளவிகாவுக்கும் அவரின் காதலரான ஆப்பிரிக்க-அமெரிக்கரான மைக்கேல் மர்ஃபிக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.

பாடகி சுதா ரகுநாதனின் மகள் மாளவிகாவுக்கு ஆப்பிரிக்க அமெரிக்கரான முனைவர் மைக்கேல் மர்ஃபி மீது காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனது விருப்பத்தை பெற்றோரிடம் தெரிவிக்க அவர்களும் காதலுக்கு பச்சைக் கொடி காட்டினார்கள்.

இது குறித்து அறிந்த நெட்டிசன்களோ சுதா ரகுநாதனின் மகள் கிறிஸ்தவராக மாறிவிட்டார் அதனால் அவரின் அம்மாவை இனி சபாக்களில் பாட அனுமதிக்கக் கூடாது என்று கூறி கடுமையாக விமர்சித்தனர்.

மாளவிகா, மைக்கேல் மர்ஃபியின் திருமணம் சென்னையில் வைணவ முறைப்படி சிறப்பாக நடைபெற்றது. இந்த திருமண விழாவில் இருவீட்டாரும், நெருங்கிய நண்பர்களும் கலந்து
மாப்பிள்ளை மர்ஃபி மட்டும் அல்ல அவரின் குடும்பத்தாரும் தமிழ் கலாச்சாரப்படி உடை அணிந்து திருமணத்திற்கு வந்தவர்களை வியக்க வைத்தனர். திருமணத்தின்போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. கிறிஸ்தவரான மர்ஃபியை திருமணம் செய்ய மாளவிகா மதம் மாறவில்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

மகள் மாளவிகா வெளிநாட்டவரான அதுவும் வேறு மதத்தை சேர்ந்தவரான மர்ஃபியை திருமணம் செய்ததில் சுதா ரகுநாதனுக்கு பிரச்சனை இல்லை. அதே போன்று மர்ஃபி வீட்டாருக்கும் பிரச்சனை இல்லை. இந்நிலையில் நெட்டிசன்கள் தான் மதம், ஆச்சாரம், கலாச்சாரம் என்று கூறி சமூக வலைதளங்களில் சுதா ரகுநாதனை கேவலமாக விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மாளவிகா, மைக்கேல் மர்ஃபி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா, தளபதி விஜய்யின் அம்மா ஷோபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நெட்டிசன்கள் நான்கு நாட்களுக்கு தன்னை திட்டுவார்கள் அதன் பிறகு வேறு பிரச்சனை வந்தால் அதை பற்றி பேசப் போய்விடுவார்கள் என்பது சுதாவுக்கு தெரியும். யார் பேசினால் என்ன மகளின் சந்தோஷம் தான் முக்கியம் என்று அவர் துணிந்து இந்த திருமணத்தை ஜாம் ஜாமென்று நடத்தி வைத்துள்ளார்.-Source: filmibeat

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!